டெல்லி : மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசுகிறார்.அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் அவர் பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.