மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிந்தது

மும்பை,
மராட்டியத்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. 2-வது வாரத்தில் மாநிலத்தில் தொற்று பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது. இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியது. 

இதில் இன்று  பாதிப்பு அதிரடியாக சரிந்தது. மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 436 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 78 லட்சத்து 10 ஆயிரத்து 136 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75 லட்சத்து 57 ஆயிரத்து 34 பேர் குணமாகி உள்ளனர்.தற்போது மாநிலத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதேபோல மாநிலத்தில் மேலும் 24 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 98 பேர் உயிரிழந்து உள்ளனர். இதேபோல மாநிலத்தில் புதிதாக யாருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை. இதுவரை ஒமைக்ரான் கண்டறியப்பட்ட 3 ஆயிரத்து 334 பேரில் 2 ஆயிரத்து 23 பேர் குணமாகி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.