வார ராசிபலன்

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 7 முதல் 13 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி.

மேஷ ராசி அன்பர்களே!

பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய வாரம். கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை யும், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம். சகோதரர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பது தாமதமாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12, 13

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 9

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சொல்லுரம் பெற்ற சோர்விலா தூயவீரன்

வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன்

அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும்காலை

கல்லினைப் பெண்ணாய்ச் செய்தான் கழலிணைப் போற்றுவோமே

ரிஷப ராசி அன்பர்களே!

வருமானம் திருப்தி தரும். சிறிது சேமிக்கவும் முடியும்.உறவினர்கள் வருகையால் தடைப்பட்ட சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். முக்கியமான ஒரு பிரச்னையை சமயோசிதமாகத் தீர்த்து நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற் கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்.

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் – நெஞ்சில்

பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் – கந்த

சஷ்டி கவசம் தனை

அமரரிடர் தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி

மிதுன ராசி அன்பர்களே!

அனுகூலமான வாரமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதி கரிக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகளை நன்கு யோசித்து எடுப்பது நல்லது.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த அல்லது வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சிகள் சற்று இழுபறியாக இருக்கும் என்பதால் பொறுமை அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். குடும்பப் பொறுப்புகளை உற்சாக மாக நிறைவேற்றி பாராட்டுப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 7, 8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமகாவிஷ்ணு

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே

கடக ராசி அன்பர்களே!

குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் அனு கூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க் கைக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் வருகை சில குழப்பங் களை ஏற்படுத்தினாலும் பாதிப்பு இருக்காது.

அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும். சக ஊழியர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு

நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்

கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

சிம்ம ராசி அன்பர்களே!

பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளுக்கும் இடமில்லை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வழக்குகள் மற்றும் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை அவசியம்.

புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் சிறுசிறு சலனம் ஏற்படக் கூடும். புகுந்தவீட்டு உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை மிக அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கைதணி விப்பான்- விநாயகனே

விண்ணுக்கும் மண்ணுக்கு நாதனுமாந் தன்மையினாற்

கண்ணிற பணிமின் கனிந்து

கன்னி ராசி அன்பர்களே!

பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர் வுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் முயற் சிக்கு நண்பர்களின் பூரண ஆதரவுடன் தேவையான உதவியும் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் ஆதா யம் கிடைக்கக்கூடும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண் டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு பணிநிமித்தமான பயணங்கள் உண்டு.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரம் என்றே சொல்ல வேண் டும். பிள்ளைகள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12, 13

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7

சந்திராஷ்டம நாள்கள்: 7, 8

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறை முடித்த

ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே – அன்பு முன்பு

செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

துலா ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்,

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 7, 8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9

சந்திராஷ்டம நாள்கள்: 9, 10

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்

முன் செய்த மூவெயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்

மின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே

என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே.

விருச்சிக ராசி அன்பர்களே!

குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். விற்பனையும் சுமாராகத்தான் இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 8, 9

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9

சந்திராஷ்டம நாள்கள்: 11, 12, 13

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

தனுசு ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சமாளிக்கும் அளவுக்குப் பணவரவு இருக்கும். வாரப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி யுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.

வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதல் உழைப்பு தேவை. சக வியாபாரிகளால் மறை முகத் தொல்லைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு எதுவும் இருக்காது.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் உற்சாகமாகச் செயல்பட வைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி

காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

மகர ராசி அன்பர்களே!

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந் திருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் மன விருப்பத்தின்படி நடந்துகொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர் கள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு கிடைப்பதற்குமான சந்தர்ப்பம் கனிந்து வரும்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது. வாடிக்கையாளர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத் தும். கணவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12, 13

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 8

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை

இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை

நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுவனே

கும்ப ராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு தந்தைவழி உறவி னர்கள் வருகையால் வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செலுத்தமுடியாமல் இருந்த தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி நிம்மதி பெறும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவார். வாரப் பிற்பகுதியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசர ணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 7, 8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா

வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே

செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

மீன ராசி அன்பர்களே!

பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பது இழுபறியாகும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். கணவன் – மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர் களால் ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புப வர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிலருக்கு சிறிய அளவில் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10, 11

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: ரங்கநாத பெருமான்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விரும்பி நின்றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை

இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட

கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.