வித விதமான சேலை… ஹோம்லி லுக்கில் கலக்கும் நடிகை ஸ்ருதி ராஜ்

Actress Shruthi Raj Photo gallery : சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ராஜ்.

1995-ம் ஆண்டு அக்ரஜன் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, விஜயுடன் மாண்புமிகு மாணவன், இனி எல்லாம் சுகமே, மந்திரன், ஜேர்ரி, உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர், கடைசியாக தமிழில் இயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து 2009-ம் ஆண்டு சன்டிவியின் தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், துளசி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சன்டிவியின் திருமதி செல்வம், விஜய் டிவியின் ஆபீஸ், ஜீ தமிழின் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

2017-ம் ஆண்டு சன்டிவியின் அழகு சீரியலில், சுதா என்ற முதன்மை கேரக்டரில் நடித்து வந்தார். ரேவதி தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த சீரியல் கொரோனா தொற்றின் முதல் அலையில் நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு சீரியலில் நடிக்காத இவர், கடந்த ஆண்டு சன்டிவியில் தொடங்கப்பட்ட தாலாட்டு சீரியலில் நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தாய் பாசத்தை அடிப்படையாக வைத்து வெளியாகிவரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ருதிராஜ் அவ்வப்போது தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ஹேம்லி லுக்கில் ஸ்ருதி ராஜ்

மாடர்ன் உடையில் ஸ்ருதி ராஜ்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.