2,000 ஆண்டுப் பழைமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் ஒரு பார்வை!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அதற்கு முன்னதாக கடந்த 3-ம் தேதி தருமபுரம் 27-வது அதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மானிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் ஆசியுடன் முதல் கால பூஜை தொடங்கியது.

விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம்

இந்தக் கோயிலுக்குக் கடந்த 2002-ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு இருபது ஆண்டுகள் கழித்து நேற்றுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக திருப்பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் திருப்பணிக் கமிட்டிக் குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைப்பெற்று வந்தது. கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 31-ம் தேதி சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, திசா ஹோமங்கள், சப்தமாதா பூஜைகள் செய்யப்பட்டன.

அப்போது மகா ஹோமம் வளர்க்கப்பட்டு, கலசங்களுக்கு மகா தீபாரதனையும் நடத்தப்பட்டது. 81 ஹோம குண்டங்கள், 9 நவ அக்னி ஹோம குண்டங்கள், 2 பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், 35 ஏகா அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டு கலசங்களுக்கு கலாகர்ஷணம், பஞ்சமூர்த்தி பூஜைகளும், மாலையில் முதல் கால பூஜையுடன் புதிதாக அமைக்கப்பட்ட, நவ அக்னி ஹோம குண்டங்கள், பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், ஏகா அக்னி குண்டங்கள் உள்ளிட்ட 81 ஹோம குண்டங்களில் 1,300 கலசங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 4-ம் தேதி காலை மகா கும்பாபிஷேகத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட யாகசாலையில் நேற்று காலை இரண்டாம் கால பூஜைகள் மற்றும் பூர்ணாஹூதி, தீபாராதனைகளும், மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால பூஜைகளும் நடைப்பெற்றன.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

அதற்காக சிவாச்சார்யர்கள் வாசுகி மடத்திலிருந்து விசேஷ சந்தி முடிந்து ஊர்வலமாக யாக சாலைக்கு வந்தனர். தொடர்ந்து பிரமாண்ட யாகசாலையில் மூன்றாம் கால பூஜைகள் நான்காம் கால பூஜைகள், ஐந்தாம் கால பூஜைகள் நடைபெற்று முடிந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6-ம் கால பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்று. சரியாக 8 மணிக்கு கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 8.15 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் கோபுர விமானங்கள் மீது மலர்கள் தூவப்பட்டன.

மகா கும்பாபிஷேக விழா பாதுகாப்புக்காக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேசன் உள்பட 2 ஏ.டி.எஸ்.பிக்கள், 10 டி.எஸ்.பிக்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 1,500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விருத்தாசலம் பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வருகின்ற 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணி முதல் 12.30 மணிக்குள் மாசிமக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டுக் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Also Read: 20 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன்கோயில் ஆலயக் குடமுழுக்குப் பணிகள் தொடக்கம்!- பக்தர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து கும்பாபிஷேக விழாவை தரிசித்தனர். அதேபோல தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், சபா ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். முன்னதாக வாழும் கலை மையத்தின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி பெங்களூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெய்வேலி வந்திறங்கி அங்கிருந்து கோயிலுக்கு காரில் வந்து பூஜை செய்துவிட்டு காரில் வந்து தரிசனம் செய்து விட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.