தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள்.
யாத்ரா, லிங்கா என்று இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் வளர்ந்த பிறகு பிரிந்துவிடலாம் என்று பேசி வைத்து காத்திருந்தார்களாம். இதை அவர்களின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் அவரை முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா தனுஷுக்கு இல்லையாம். அப்படி விவாகரத்து செய்யாமல் வாழ்ந்தால் ஏதாவது பிரச்சனை வருமா என்று வழக்கறிஞர்களிடம் கேட்டறிந்தாராம்.
இதற்கிடையே தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. நீ தனுஷுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று மகளுக்கு உத்தரவே போட்டுவிட்டாராம் ரஜினி. அப்பாவுக்காக தனுஷுடன் சேர்ந்து வாழ தயாராகிவிட்டாராம்
ஐஸ்வர்யா
. ஆனால்
தனுஷ்
தயாராக இல்லையாம்.
பிள்ளைகளை பற்றி நானும் தான் யோசித்துப் பார்த்தேன். இனியும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது என்று தன் பெற்றோரிடம் கூறினாராம் தனுஷ்.
ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர்
தன் திருமண வாழ்க்கை குறித்து தனுஷ் சொன்ன விஷயங்களை கேட்டு அவர் பெற்றோர் அழுதுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இனிமேல் நான் திருமணமே செய்ய மாட்டேன். கடைசி வரை இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறாராம் தனுஷ்.