இத உடனே பண்ணுங்க… இல்லனா உங்க போன் அவ்வளவுதான்!

ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகளின் பாதுகாப்பிற்காக இரண்டடுக்கு அங்கீகார பாதுகாப்பு முறையை (
2FA
) பலர் பின்பற்றி வருகின்றனர். இதற்காக பல செயலிகள் கூகுள் ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. இதில் முக்கியமானதாக சில செயலிகளை பயனர்கள் உபயோகித்து வருகின்றனர்.

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதாக இந்த செயலிகள் மீது பயனர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், தற்போது இந்த செயலிகளே, பயனர்களுக்கு எமனாக மாறியிக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இரண்டடுக்கு அங்கீகாரம் தருவதாகக் கூறி மால்வேர் செயலி ஒன்று நுழைந்துள்ளது.

spam call blocker: வெறுப்பேத்தும் ஸ்பேம் அழைப்புகளில் இருந்து தப்ப வேண்டுமா… உங்களுக்காக உதவும் செயலிகள்!

தீங்கிழைக்கும் செயலி

ப்ரேடோ (Praedo), இரண்டடுக்கு அங்கீகார செயலியாக கூகுள் ப்ளே ஸ்டோருக்குள் நுழைந்ததும், அதனை 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் சிலரது வங்கி கணக்கு தரவுகள், ஹேக்கர் உலகில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக இந்த செயலியை, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்.

ஓபன் சோர்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயலியில் வல்டர் ‘Vultur’ எனும் மால்வேர் பேக்கேஜ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது இணைப்புகளின்றி நிறுவப்பட்டிருக்கும் தகவல் சாதனத்தில் இருக்கும் வங்கி தொடர்பான தகவல்களை திருடும் வல்லமை படைத்தது. RAT வகை, அதாவது தீங்கிழைக்கும் ரிமோட் அக்சஸ் ட்ரோஜன் என்று பொருள்படும்.

சிக்னல், டெலிகிராம், வாட்ஸ்அப் – இதில் எந்த மெசஞ்சர் பாதுகாப்பானது?

உடனடியாக அழிக்க உத்தரவு

இந்த செயலியை கூகுள் அழிக்காமல் இருந்திருந்தால், உலகளவில் பல நபர்களின் வங்கிக் கணக்குகள் சூறையாடப் பட்டிருக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த செயலியை கூகுள் அகற்றுவதற்கு முன் 10,000 பேருக்கு மேல், இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியுள்ளனர். செயலியை நிறுவியவர்கள் உடனடியாக அதனை அழிக்க கூகுள் வலியுறுத்தியுள்ளது.

பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?

பயனர்களுக்கு மேம்பட்ட இரண்டடுக்கு அங்கீகாரப் பாதுகாப்பு தேவைப்பட்டால் ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுளின் பிரத்யேக ‘கூகுள் ஆதெண்டிகேட்டர்’ (
Google Authenticator
) செயலியை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா வாங்குவதில் குழப்பமா – கவனத்தில் கொள்ள வேண்டிவை என்னென்ன

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.