ஐ.எஸ்.எல். கால்பந்து: இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்-ஏ.டி.கே.மோகன் பகான் மோதல்

கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து 6-வது வெற்றியை தனதாக்கியது. ஒடிசா அணியில் ஜோனதஸ் கிறிஸ்டியன் 23-வது நிமிடத்திலும், ஜாவி ஹர்னாண்டஸ் 75-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஈஸ்ட் பெங்கால் அணியில் அந்தோணி பெரோசிவிச் 64-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். ஈஸ்ட் பெங்கால் சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத்-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் சந்திக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.