கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க… ஆபத்து இருப்பதாக அரசு தகவல்!

இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’
கூகுள் குரோம்
பிரவுசர் (
Google Chrome Browser
) பயனர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது 98.0.4758.80.க்கு முந்தைய பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த எச்சரிக்கை எனத் தெரிவித்துள்ளது. கணினியை இலக்காக வைத்து சைபர் அட்டாக் நடத்துவதற்கு சாதகமான பல காரணிகள் கூகுள் குரோம் உலாவியில் கண்டறியப்பட்டுள்ளது.

சேமிப்பு, திரைப் பதிவு, உள்நுழைவு, பிடிஎப், ஆட்டோ பில், கோப்பு மேலாளர் ஆகிய வசதிகளை நாம் பயன்படுத்தும் போது, அதனை ஹேக்கர்கள் அணுக அனுமதிக்கும் சில பக்ஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச்சரிக்கை விடுக்கும் இந்திய அரசு

கூகுள் குரோம் உலாவியின் யூசர் இண்டர்பேஸ் குறித்து பல கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில், பயனர்களின் தரவுகளை அணுகும் விதம், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்திய அரசும் பல முறை, எச்சரிக்கை விடுத்து, கூகுள் குரோம் பிரவுசர்களை புதுபிக்க அறிவுறுத்திவருகிறது.

spam call blocker: வெறுப்பேத்தும் ஸ்பேம் அழைப்புகளில் இருந்து தப்ப வேண்டுமா… உங்களுக்காக உதவும் செயலிகள்!

கணினி, இணையத்தள வரவிற்கு முந்தைய நாட்களில், நாம் உண்மையான நபர்களுடன் தொடர்பில் இருந்தோம். நம் தனிப்பட்ட தகவல்கள் நம் கைகளின் பொறுப்பில் இருந்தன. அங்கு இந்தளவு பிழைகள் நிகழ்ந்ததில்லை. இப்போது நாம் சிறிய எலக்ட்ரான்கள், இலக்கங்களின் தயவில் சுழன்று வருகிறோம். இதில் ஆபத்தான பல இணைய தாக்குதல்களும் அரங்கேறுகின்றன.

ஹேக்கர்கள் அட்டகாசம்

பயனர்களை கவர தேவையான பக்கத்தை நிறுவி, அதற்குள் அவர்களை இழுத்து, அதன்மூலம் சில ஹேக்கிங் தரவுகளை நிறுவி, பயனர் தனியுரிமை தகவல்கள் திருடப்படுகின்றன. எனவே, எந்த சூழலிலும் தேவையற்ற தளம் என்று தெரிந்தால், உடனடியாக அதிலிருந்து வெளியே வந்து விடுங்கள்.

delete google history: உங்கள் ரகசிய தகவல்களை கூகுள் சேமிக்கிறது! அதை அழிக்க என்ன செய்ய வேண்டும்?

இணைய பயனர்கள் வங்கி பரிவர்த்தனைகள், இணைய படிவங்களை நிரப்பும் போது கவனமாக இருக்க வேண்டும். எப்போதும், பிரைவேட் பிரவுசர் அல்லது இன்காக்னிட்டோ பிரவுசரில்இது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சலுகைகள் தருகிறோம் என்று மொபைல் எண்ணுக்கு வரும் குறுஞ்செய்திகளை அப்படியே தவிர்த்துவிடுங்கள். எந்த காரணத்தைக் கொண்டும் தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

கூகுள் குரோம் புதிய அப்டேட்

எனவே Google Chrome பயனர்கள் அதன் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கி நிறுவுவது நல்லது. “விண்டோஸ் இயங்குதளத்திற்காக Chrome 98.0.4758.80/81/82 பதிப்பு, Mac, linux ஆகிய இயங்குதளங்களுக்காக 98.0.4758.80 பதிப்பு புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல திருத்தங்களும், மேம்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூகுள் தெரிவித்துள்ளது. இது அப்டேட் செய்யும் பயனர்களுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது.

பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.