சோகத்தை மறக்க ரஜினி போட்டுள்ள புதிய திட்டம்: மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ரஜினி, தங்க செயின் பரிசாக அளித்தார். அத்துடன் சிவாவுடன் 3 மணிநேரம் கலந்துரையாடிவிட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் – தனுஷும் பிரியவுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். மகளின் விவாகரத்து முடிவை ரஜினி சிறிதும் விரும்பவில்லையாம். குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ஆர்டர் போட்டாதாகவும் தகவல்கள் வெளியானது. இதுமட்டுமல்லாமல் குடும்ப நண்பர்கள் மூலமாக தனுஷ், ஐஸ்வர்யா இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும் ரஜினி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

பிரபல இயக்குனரிடம் அடி வாங்கினேன்: பிரியாமணி கூறிய அதிர்ச்சி தகவல்…!

அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சனையால் மன வேதனையில் இருக்கும் ரஜினி, தனிமையிலே இருந்து வருவதாகவும் சில காலம் தனிமையில் இருக்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி
தலைவர் 169
படத்தை
நெல்சன் திலீப்குமார்
இயக்கவுள்ளதாகவும் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் ‘
பீஸ்ட்
‘ படத்தை இயக்கி முடித்துள்ளார். டார்க் காமெடியில் கலக்கும் நெல்சன், ரஜினியுடன் இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. சமீபகால சோகங்களை மறக்கும் அளவிற்கு சிரித்து கொண்டாடுற மாதிரி ஒரு படம் கொடுங்க தலைவரே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதனையொட்டி #Thalaivar169 என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.