தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது….

சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதம் குறித்து விளக்கி பேசினார். அப்போது நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார்.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, கடந்த 2021ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் கோரி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஏற்க மறுத்து  ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பினார். இது சர்ச்சையான நிலையில், மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றும் வகையில், இன்று  சிறப்புச் சட்டப் பேரவை கூட்டம் கூடியுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு சிறப்பு கூட்டம் தொடங்கியது. வழக்கமான நடைமுறைகளைத் தொடர்ந்து, ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியது மற்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து, சபாநாயகர் அப்பாவு விவரித்து உரையாற்றினார்.

அப்போது ஆளுநர் மாளிகை இது தொடர்பாக கடிதம் வெளியிட்டு பொது விவாதத்துக்கு வழிவகுத்துள்ளதாக குற்றம் சாட்டியதுடன், ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதத்தை பதிவு செய்தார்  சபை குறிப்பில் பதிவு செய்தார். ஆளுநர் கடிதத்தின் தமிழாக்கத்தை முழுமையாக வாசித்தார்.

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என விமர்சித்ததுடன்,  காமாலைக் கண்ணுடன் ஏ.கே.ராஜன் அறிக்கை என ஆளுநர் விமர்சனம் செய்துள்ளது சரியல்ல என்று தெரிவித்ததுடன்,  அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என கூறினார்.

இதையடுத்து,  நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

முன்னதாக இன்றைய சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்திற்கு முன், அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை. நடத்தினர். சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது.

இன்றைய சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.