நீட் விலக்கு மசோதா: சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம்…

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சென்னை கோட்டை  தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவையில்,  இன்று நீட் விலக்கு மசோதா நிறைவேற்றும் வகையில்  சிறப்புக் கூட்டம் நடைடிபெற்றது. இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் நடவடிக்கை குறித்து, விமர்சித்த சபாநாயகர், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார்.

இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்து உரையாற்றினார்.அதைத் தொடர்ந்து அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் மசோதா மீது தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

அதன்படி, அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உரையாற்றினார். அப்போது நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதுடன், நீட் விலக்கு மசோதா முந்தைய காங்கிரஸ் கட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.

இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது, பேரவைத் தலைவர், காங்கிரஸ் உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படியும், செல்வப்பெருந்தகையை அமரும்படியும் அறிவுறுத்தினார்.

மீண்டும் விஜயபாஸ்கர் சில கருத்துக்களை பேசியபோதும், காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை குறுக்கிட்டார். அப்போதும் சபாநாயகர், அவரை அமரும்படி கடிந்துகொண்டார்.

இதையடுத்து  பேசிய விஜயபாஸ்கர், அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக 7.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தியது அதிமுக. பின்தங்கிய மாணவர்களின் நலனுக் காக நாம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை 2-வது முறையாக நிறைவேற்றி உள்ளோம் என்று தெரிவித்ததுடன், நீட் மசோதா குறித்து அதிமுக மீது குற்றம் சாட்டப்படுவதாகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே, நீட் விலக்கில் அதிமுக உறுதியாக இருப்பதாக கூறியதுடன் நீட் மசோதாவை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான் என்றும், இறுதியாக தடை உச்சநீதிமன்றம் சென்று தடுத்து நிறுத்தியது யார் என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.

இதற்கும் செல்வப்பெருந்ததை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதைடுதுது பேசிய முதல்வர் ஸ்டாலின்,  அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? கேள்வி எழுப்பினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதில் கூறினார்.

தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர்,. நீட் எதிர்ப்பு கொள்கையில் என்றும் அதிமுக உறுதியாக இருக்கிறது என்றும்,  அதிமுக யாருக்கோ அடிபணிந்து விட்டது என்ற கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எனவும் கூறினார். 1984-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு சட்டம் கொண்டு வந்தது என்றும், தமிழகத்தில் இடஒதுக்கீட்டுக்கா போராடியதில் அதிமுகவுக்கும் பங்கு இருப்பதாக தெரிவித்தவர், அதற்காக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை திராவிடர் கழகம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.