நீண்டநாட்கள் கழித்து பொதுநிகழ்ச்சியில் ரஜினிகாந்த்

கொரோனா மூன்றாவது அலை ஆரம்பித்த சமயத்தில் இருந்தே திரையுலக பிரபலங்கள் பலரும் பொது இடங்களுக்கு வருகை தருவதையோ, அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையோ தவிர்த்து வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்தபின் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பெரிய அளவில் கலந்துகொள்ளவில்லை..

தனது மருமகன் விசாகன் துவங்கிய அபெக்ஸ் லேப் துவக்கவிழா கூட தங்களது குடும்ப நிகழ்வு என்பதால் கலந்துகொண்டது தான்.. மற்றபடி தனது பிறந்தநாள் மற்றும் பொங்கல் பண்டிகை தினத்தன்று கூட வழக்கம்போல் தனது வீட்டில் இருந்தபடியே ரசிகர்களை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்தநிலையில் நீண்ட நாட்கள் கழித்து தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த். உடன் அவரது மாணவி லதா மற்றும் இளைய மகள் சவுந்தர்யா ஆகியோரும் அவருடன் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சி முடிந்து ரஜினிகாந்த் காரில் ஏறிச்செல்லும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.