முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும் – ஆப்பிளின் புதிய அப்டேட்!

ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்கு தொடர்ந்து புதுபுது அம்சங்களைப் புகுத்தி புதிய ஐஓஎஸ் (iOS) இயங்குதள அப்டேட்டுகளை வழங்குகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள ஐஓஎஸ் 15.3, வரவிருக்கும் ஐஓஎஸ் 15.4 பதிப்புகள் குறித்து அண்மையில் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஆப்பிள் ‘பேஸ் ஐடி வித் ஏ மாஸ்க்’ (Face ID with a mask) எனும் மாஸ்க்குடன் போனை திறக்கும் வசதியை ஆப்பிள் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடியே தான் தங்கள் அன்றாடப் பயணங்களையும் வேலைகளையும் செய்து வருகின்றனர். அவ்வாறு மாஸ்க் அணிந்து கொண்டே இருக்கும் சமயத்தில், நமது மொபைலை முகத் தோற்றத்தைக் கொண்டு செயல்படும் பேஸ் அன்லாக் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாமல் போகிறது.

மாஸ்க் அணிந்தபடியே போனை திறக்கலாம்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பேஸ் ஐடிக்கு பதிலாக, கைரேகை சென்சார், பேட்டர்ன் அல்லது பாஸ்வேர்ட் என ஏதாவது ஒன்றை நாம் பயன்படுத்தி போனை திறக்க முடியும். ஆனால், சமீபத்திய ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் டச் ஐடி சென்சார் கிடையாது. இதன் காரணமாக பெரும்பாலான ஆப்பிள் பயனர்கள் பேஸ் ஐடி அல்லது பாஸ்வேர்டை நம்பியே இருக்கின்றனர். ஆனால், பேஸ் ஐடி அவர்களுக்கு சுலபமானதாக மாறிவிட்டது.

இந்த சூழலில், கொரோனா மாஸ்க் அவர்களை பாடாய் படுத்தி விட்டது. மாஸ்க் அணிந்து பேஸ் ஐடியை தொடர்பு கொள்வது முடியாத காரியமாக இருந்தது. திறன் வாய்ந்த கேமரா முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதனை இயக்கும் இயங்குதள அம்சம் ஐபோனில் இல்லாமல் இருந்தது.

ஐபோன் 14 அப்டேட்: பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உறுதி… 2022 ஆப்பிள் கொண்டாட்டம்

ஆப்பிள் புதிய அப்டேட்

இதனை புரிந்துகொண்ட ஆப்பிள் நிறுவனம், மாஸ்க் உடன் பேஸ் ஐடி எனும் புதிய அப்டேட்டை பயனர்களுக்கு வழங்க உள்ளது. இந்த அப்டேட் ஆப்பிள் ஐஓஎஸ் 15.4 உடன் வரவிருக்கிறது. எனவே பயனர்கள் இனி முகக்கவசம் அணிந்தபடியே ஐபோன் திறக்க முடியும் . இதுமட்டுமின்றி, பயனர்களுக்கு இந்த அப்டேட் மூலம் மேலும் ஒரு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கண் கண்ணாடி அணிந்து கொண்டும் ஐபோன் திறக்கலாம் என்ற அம்சத்தையும் ஆப்பிள் நிறுவனம் புதிய அப்டேட்டுடன் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனம் 2022ஆம் ஆண்டுக்கான புதிய ஆப்பிள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை மார்ச் 8ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தினத்தில் SE ரக புதிய ஐபோன், புதுப்பிக்கப்பட்ட ஐபேட் ஏர், ஐ மேக் ஆகியவற்றுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த தினத்தில் தான் ஐஓஎஸ் 15.4 பதிப்பும் வெளியிடப்படுகிறது.

ஐபோன் விற்பனை ஜோர்.. இந்தியாவில் கலக்கும் ஆப்பிள் நிறுவனம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.