மைக்கேல் மதன கமாராஜன் படத்தில் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்!

நடிகர், தடகள வீரர், அரசியல்வாதி என பல திறமைகளை கொண்டவர்
பிரவீன் குமார் சோப்தி
. இவர் மகாபாரதம் டிவி சீரியலில் பீமராக நடித்ததன் மூலம் பிரபலமானார். 50க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார் பிரவீன் குமார் சோப்தி.

பேச்சு வார்த்தை வேலைக்கு ஆகவில்லை…. கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ரஜினி!

பிரவீன் குமார் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாகேஷை
பீம் பாய்
ஒரே கையில் தூக்கி செல்லும் காட்சி பெரும் பிரபலமானது. அதோடு கமல் கீழே குதி என்றதும் ஜன்னல் வழியாக உடனே கீழே குதித்து எழுந்து வருவார் பிரவீன் குமார். இந்த காட்சிகளுக்கு இன்று வரையும் ரசிகர்கள் உண்டு.

பூவே உனக்காக பூவரசியா இது… மாடர்ன் உடையில் கலக்கல் போஸ்!

விளையாட்டு வீரரான இவர், ஆசிய அளவில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளார்.பிரவீன் குமார் நீண்ட நாட்களாக மார்பு தொற்று பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கல்யாணம் முடித்த கையோடு ஹனிமூன் கிளம்பிய பிரபல நடிகை… குளுகுளு போட்டோஸ்!

எனினும் சிகிச்சை பலனின்றி இரவு மாரடைப்பால் பிரவீன் குமார் காலமானார். 74 வயதாகும் பிரவீன் குமாருக்கு மனைவி, மகள், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர்.

இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யானை படம் ரிலீஸ்: அருண் விஜய் சொன்ன தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.