விருஷ்காவின் புதிய முதலீடு ‘சைவ இறைச்சி’.. இந்தியாவுக்கு இது புதுசு..!

இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா விளையாட்டு, சினிமா துறையில் பல வெற்றிகளைக் கண்டு வரும் நிலையில் முதலீட்டுச் சந்தையிலும் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகச் சம்பாதிக்கும் பிரபல ஜோடியாக விளங்கும் விருஷ்கா சைவ இறைச்சி தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

NBFC நிறுவனத்தை உருவாக்கும் சோமேட்டோ.. 2 நிறுவனத்தில் புதிதாக ரூ.150 கோடி முதலீடு..!

 விருஷ்கா

விருஷ்கா

ஹோட்டல் துறையில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள விருஷ்கா தற்போது பிளாட் பேஸ்டு மீட் அதாவது சைவ இறைச்சி. உலகளவில் உணவுக்காக விலங்குகளைக் கொல்ல கூடாது என்ற கருத்து நிலவி வரும் நிலையில் மக்களுக்கு இறைச்சி மீதான ஈர்ப்பை குறைக்க முடியாத நிலையில் உருவாக்கப்பட்டது தான் இந்தச் சைவ இறைச்சி.

 சைவ இறைச்சி

சைவ இறைச்சி

பிளாட் பேஸ்டு மீட் அதாவது சைவ இறைச்சி என்பது உணவு தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் ஒரு இறைச்சி போன்ற தோற்றம், சமைத்த பின்பு சுவை கொண்டு ஒரு பொருள். இறைச்சிக்கு இருக்கும் அனைத்து வடிவம், டெக்சரும் இந்தச் சைவ இறைச்சியில் இருக்கும்.

 லாக்டவுன் காலம்
 

லாக்டவுன் காலம்

இந்தச் சைவ இறைச்சி உலக நாடுகளில் ஏற்கனவே அதிகளவில் பயன்படுத்தத் துவங்கப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவில் இந்த லாக்டவுன் காலத்தில் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இத்தகைய சைவ இறைச்சி பயன்பாடு அதிகரித்து வருகிறது.

 ப்ளூ ட்ரைப் புட்ஸ்

ப்ளூ ட்ரைப் புட்ஸ்

இந்நிலையில் இந்தியாவில் சைவ இறைச்சிக்கு இருக்கும் வர்த்தக வாய்ப்பை உணர்ந்த விருஷ்கா ப்ளூ ட்ரைப் புட்ஸ் என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

முதலீடு

முதலீடு

சந்தீப் சிங் மற்றும் நிக்கி அரோரா சிங் இணைந்து உருவாக்கிய ப்ளூ ட்ரைப் புட்ஸ் என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெளியிடப்படாத தொகையை முதலீடு செய்து பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. தற்போது இந்தச் சைவ இறைச்சி மேல்தட்டு மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக உள்ளது.

 ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா

ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா

கடந்த ஆண்டுப் பாலிவுட் நடிகர்களான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் இணைந்து தாவர அடிப்படையிலான இறைச்சி பிராண்டான இமேஜின் மீட்ஸை அறிமுகப்படுத்தினர். தற்போது விருஷ்கா ப்ளூ ட்ரைப் புட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

 பியோண்ட் மீட்

பியோண்ட் மீட்

தாவர அடிப்படையிலான இறைச்சி விற்பனையில் பியோண்ட் மீட் போன்ற பல சர்வதேச நிறுவனங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில் இந்திய சந்தையில் ப்ளூ ட்ரைப் புட்ஸ் மற்றும் இமேஜின் மீட்ஸை இத்தகையை வெற்றியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Virat Kohli, Anushka Sharma invest in startup Blue Tribe Foods develops plant based meat

Virat Kohli, Anushka Sharma invest in startup Blue Tribe Foods develops plant based meat விருஷ்காவின் புதிய முதலீடு ‘சைவ இறைச்சி’.. இந்தியாவுக்கு இது புதுசு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.