14 வருடத்தில் இல்லாத மோசமான ஆரம்பம்.. வாங்கலாமா? விற்கலாமா? அட்டகாசமான பரிந்துரை..!

இதற்கிடையில் 2020 , 2021ம் ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் பெரியளவிலான ஏற்றத்தினைக் கண்டது. ஆனால் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அது அப்படியே தலைகீழாக உள்ளது.

2008ம் ஆண்டில் இருந்து பார்க்கப்போதும் நடப்பு ஆண்டில் மிக மோசமான தொடக்கத்தினைக் கண்டுள்ளது. இது சந்தையில் புராபிட் புக்கிங் காரணத்தினால் இருக்கலாம் என கூறப்படுகிறது.

2 சக்கர வாகன கடனுக்கு எது சிறந்தது.. எங்கு வட்டி குறைவு..! #banks #2wheelerloan

 நிஃப்டி ஐடி 11% சரிவு

நிஃப்டி ஐடி 11% சரிவு

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நிஃப்டி ஐடி 11% சரிவினைக் கண்டுள்ளது. இதுவரையில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாமோ என்ற அச்சத்திற்கு மத்தியில், புராபிட் புக்கிங்கினை செய்துள்ளனர்.

அமெரிக்காவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நுகர்வோர் விலை பணவீக்கத்தின் மத்தியில், நடப்பு ஆண்டில் 4 முறை வட்டி விகிதத்தினை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களாக கரடியின் பிடியில் சிக்கித் தவித்து வரும் தொழில் நுட்ப நிறுவனத்தின் பங்குகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

 முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

அன்னிய முதலீட்டாளர்கள் மட்டும் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே கடந்த 5 மாதங்களில் 34,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். ஒப்பந்தங்களின் மதிப்பு, தொழிற்துறையில் நிலவி வரும் அழுத்தம், ,மார்ஜின் விகிதத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தம், திறன்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு மத்தியில் ஐடி துறையானது பற்பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

அன்னிய முதலீடுகள் விகிதம்
 

அன்னிய முதலீடுகள் விகிதம்

இதற்கிடையில் தான் செப்டம்பர் 2021ல் 3725 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. இதே அக்டோபர் 21ல் 10,788 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளன. நவம்பர் 2021ல் 2732 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், டிசம்பர் 2021ல் 1317 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தும், ஜனவரி 15,888 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

 கவனம்

கவனம்

இந்தளவுக்கு சரிவினைக் கண்டுள்ள நிறுவனங்களின் பங்கினை வாங்க இது தான் சரியான சமயம் என ஒரு தரப்பினர் கூறினாலும், இன்னும் குறைந்த பின்னர் வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த பங்கினை, விற்பனை செய்ய முற்படும்போது இந்த சரிவின் போக்கு தொடரலாம். எனினும் நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம், ஒப்பந்த விகிதம் உள்ளிட்டவற்றை கவனித்து கையாள்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IT shares off to worst start in 14 years, is it right time to buy?

IT shares off to worst start in 14 years, is it right time to buy?/14 வருடத்தில் இல்லாத மோசமான ஆரம்பம்.. வாங்கலாமா? விற்கலாமா? அட்டகாசமான பரிந்துரை..!

Story first published: Tuesday, February 8, 2022, 20:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.