Beast First Single: எல்லாமே வேற லெவல்.. அது மட்டும் மிஸ்சிங்..!

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வந்தார்
விஜய்
. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ‘
பீஸ்ட்
‘ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார்
நெல்சன் திலீப்குமார்
. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அண்மையில் இந்தப்படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.

‘பீஸ்ட்’ படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து முடித்துள்ள செல்வராகவன் அடுத்ததாக ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார்.

கோலிவுட் ஹீரோக்களில் இவர்தான் பர்ஸ்ட்.. வேற லெவல் சாதனை படைத்த சிம்பு..!

இந்நிலையில் நேற்றைய தினம் ‘அரபிக் குத்து’ என்ற முதல் சிங்கிளுக்கான புரோமோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் நெல்சன், பாடலை எழுதியுள்ள சிவகார்த்திகேயன், அனிருத் மூவரும் பாடல் குறித்து டிஸ்கஷன் செய்வது போல் செம்ம ஜாலியாக ஒருவரை ஒருவரை கலாய்த்து கொண்டனர். அப்போது போனில் பேசிய விஜய் ‘உங்களை எல்லாம் நம்ப முடியாது. நேர்ல வாங்க’ என அவரும் மிக இயல்பாக பேசியிருந்தார்.

இணையத்தில் வைரலான இந்த புரோமோ வீடியோ ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த வீடியோ நெல்சன் ஸ்டைலில் செம்ம ஜாலியாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் போனில் பேசிய விஜய்யை, வீடியோ காலில் கூப்பிட்டு இருக்கலாம். அது மட்டும் மிஸ்சிங் என்றும் கமெண்ட்டடித்து வருகின்றனர். ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.