EPFO குட் நியூஸ்.. வட்டி விகிதத்தை உயர்த்த இறுதி முடிவு..!

மாத சம்பளக்காரர்களுக்கு அதீத பலன் அளிக்கும் மிக முக்கியமான சேமிப்பு திட்டமான EPF மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்க முக்கியமான ஆலோசனைக் கூட்டம் கூட உள்ளது.

2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் பலன் அடையும் வகையில் அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் மத்திய அரசு EPF வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தைக் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனால் இந்த முக்கியமான கூட்டத்தின் முடிவுகள் எதிர்நோக்கி மாத சம்பளக்காரர்கள் காத்திருக்கின்றனர்.

ரெக்கை இல்லாமல் பறக்கும் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமா?

EPFO அமைப்பு

EPFO அமைப்பு

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய டிரஸ்டீஸ் குழு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கவுகாத்தி-யில் நடப்பு நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் கூட்டத்தை நடத்த உள்ளது.

2021-22 நிதியாண்டு

2021-22 நிதியாண்டு

2020-21ஆம் நிதியாண்டில் முந்தைய ஆண்டை போலவே 8.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தை EPF வைப்பு நிதிக்கு வழங்கப்பட்ட நிலையில் 2021-22ஆம் நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய இக்கூட்டம் நடக்க உள்ளது.

நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழு
 

நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழு

இந்நிலையில் வருகிற வியாழக்கிழமை EPFO அமைப்பின் நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழு மொத்த வருமானம் மற்றும் லாப அளவீடுகளைக் கணக்கிடும் பணிகளைத் துவங்க உள்ளது. EPFO இன் நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழு அளிக்கும் தரவுகளை அடிப்படையாக வைத்து தான் மத்திய டிரஸ்டீஸ் அமைப்பு 2021-22 நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும்.

டிரஸ்டீஸ் கூட்டம்

டிரஸ்டீஸ் கூட்டம்

மேலும் வட்டி விகிதம் உயர்த்துவதா அல்லது தற்போது இருக்கும் அளவிலேயே வைப்பதா அல்லது குறைப்பதா என்பது குறித்த பரிந்துரை டிரஸ்டீஸ் கூட்டம் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக அல்லது அதே நாளில் அளிக்கப்படும்.

3 அமைப்புகள்

3 அமைப்புகள்

பொதுவாகப் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 3 அமைப்புகளைச் சேர்ந்த ஒன்று, இந்த அமைப்பின் கீழ் மத்திய அரசு, ஊழியர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு. மேலும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது.

கூடுதல் வட்டி வருமானம்

கூடுதல் வட்டி வருமானம்

மார்ச் முதல் வாரத்தில் நடக்கும் கூட்டத்தில் வட்டியை உயர்த்தினால் மாத சம்பளக்காரர்கள் கணக்கில் கடந்த நிதியாண்டு வரையில் வைப்பு வைக்கப்படும் நிதிக்குக் கூடுதல் வட்டி வருமானம் கிடைக்கும்.

முதலீடு

முதலீடு

இந்த வட்டி வருமானத்தை EPFO தனது முதலீட்டின் வாயிலாகக் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை EPFO கணக்காளர்களுக்கு அளிக்கிறது. சமீபத்தில் EPFO தனது முதலீட்டு அளவுகளையும், முதலீடுகளைப் பிரிவுகளையும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

EPFO finalise the interest rate on upcoming provident fund march meet

EPFO finalise the interest rate on upcoming provident fund march meet EPFO குட் நியூஸ்.. வட்டி விகிதத்தை உயர்த்த இறுதி முடிவு..!

Story first published: Tuesday, February 8, 2022, 12:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.