அமீர் முத்தம் கொடுக்கவே இல்லை; பாவனி வீடியோ

விஜய் டிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் அமீர் மற்றொரு போட்டியாளர் முத்தம் கொடுத்ததாக வெளியான வீடியோ பற்றி ரசிகர்கள் விவாதித்து வந்த நிலையில், பாவனி தனக்கு அமீர் முத்தம் கொடுக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 105 நாட்கள் முடிந்து கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த சீசனில் அனைவரும் எதிர்பாத்தபடி, ராஜு பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா இரண்டாவது இடத்தையும் பவானி ரெட்டி மூன்றாவது இடத்தையும் அமீர் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது குறித்து நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் பேசி விவாதித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனில்ம் ஒரு காதல் கிசுகிசு கிளம்பும். முதல் சீசனில் ஓவியா-ஆரவ் மருத்துவ முத்தம் பரபரப்பாக பேசப்பட்டது போல, 5வது சீசனில் அமீர்- பாவனி முத்தம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனி தனது கணவரின் மறைவுக்கு பிறகு, சீரியல்களில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இந்த சூழலில், பிக் பாஸ் வீட்டில், வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த அமீர் பாவனி ரெட்டியை காதலிப்பதாகக் கூறினார். ஆனால், பாவனி அவரை தம்பி என்று கூறி ரியாக்ட் செய்தார். ஆனாலும் அமீர் தனது காதலை தெளிவாகக் கூறி திருமணம் செய்வதாகக் கூறினார். அப்போதுதான், அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்தது போல் ஒரு காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

இது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் அமீரை கடுமையாக விமர்சித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் அமீர் – பாவனி முத்தம் விவகாரம் பேசுவது தொடர்ந்தது. இந்த நிலையில்தான், அமீர் தனக்கு முத்தம் கொடுக்கவில்லை என்று என்ன நடந்தது என்பது குறித்து பாவனி பேட்டி கொடுத்திருந்தார்.

பாவனி பேட்டி அளித்த அந்த வீடியொவில் கூறியிருப்பதாவது: “என்னை வைத்து தான் அமீர் பிரபலமானார் என்று சொல்வதெல்லாம் தவறு. அவர் திறமையாக விளையாடினார். என்னால் தான் அமீருக்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட்டுகள் வருகிறது. உண்மையை சொல்லப்போனால், அவர் என்னிடம் காதல் சொல்லும் போது எனக்கு வெக்கமாக இருந்தது. அதோடு எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியவில்லை. அதனால், நான் சும்மா விளையாட்டுக்காக தம்பி என்று சொன்னேன். இதற்கு பலரும் தம்பி என்று சொல்லாதீர்கள் என்றார்கள். அவர்களுடைய உணர்வுகளை மதித்து நானும் அப்படி கூப்பிட வில்லை.

அன்று இரவு என்ன நடந்தது என்றால், அவர் என்னிடம் ஐ லவ் யூ சொல்ல கிட்ட வந்தார். ஆனால், அதை இவர்கள் எடிட் செய்து வேற மாதிரி காண்பித்து விட்டார்கள். உண்மையாக அமீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இதை தான் மக்கள் சர்ச்சையாக்கி வருகிறார்கள். அதேபோல் நிரூப்பிற்கு முத்தம் கொடுத்தது தவறில்லை. அமீர் எனக்கு முத்தம் கொடுத்தார் என்று சர்ச்சை கிளப்பினார்கள். உண்மையில் அது முத்தம் கிடையாது. அவர் என்னிடம் கிட்டே வந்து ஐ லவ் யூ என்று மெதுவாக சொன்னதுதான் என்று கூறினார்.

இதன் மூலம், பிக் பாஸ் வீட்டில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுக்கவில்லை என்பதை பாவனி தெளிவுபடுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.