ஆட்டோவில் நகைப்பையை தவற விட்ட தம்பதியர்… நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு <!– ஆட்டோவில் நகைப்பையை தவற விட்ட தம்பதியர்… நேர்மையாக போலீ… –>

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தம்பதியர் ஆட்டோவில் தவறவிட்டுச்சென்ற நகைப்பையை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

நேற்று ஹஷாம் நகரில் இருந்து டோலிசௌக் பகுதிக்கு ஆட்டோவில் திரும்பிய மிர்சா சுல்தான் பெய்க் – சமீரா பேகம் தம்பதியினர் சுமார் 5 லட்சம் மதிப்புடைய நகைகள் அடங்கிய பையை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக அவர்கள் லங்கார் ஹவுஸ் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்களது நகைப்பையை மீட்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் மாலை 3 மணியளவில் ஆட்டோவின் டிரைவர் போலீசாரை தொடர்பு கொண்டு தனது ஆட்டோவில் பயணித்த தம்பதிகள் நகைப்பையை விட்டுச்சென்றுவிட்டதாக கூறி பின்னர் அதனை ஒப்படைத்துள்ளார். பின்னர் அதனை போலீசார் தம்பதியரிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.