இது எங்களை தூண்டிவிடும் செயல்… மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு


 உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீதான அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Sergei Ryabkov குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, ஐரோப்பியாவில் உள்ள அதன் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸில் கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

அதேசமயம், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா மறுத்துள்ளது.

இதனிடையே, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள், உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவும் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளன, அதில் ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்களும் அடங்கும்.

உக்ரைனுக்கு இராணுவ உதவிகள் வழங்கியுள்ளதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் மிரட்டல் மற்றும் அழுத்தம் அதிகரித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Sergei Ryabkov குற்றம்சாட்டியுள்ளார்.

ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட இராணுவ பொருள்கள் மூலம் உக்ரைனை பலப்படுத்துவதன் அடிப்படையில் நடக்கும் அனைத்தும், எங்கள் மீது கூடுதல் அரசியல் அழுத்தத்தையும், அநேகமாக இராணுவ தொழில்நுட்ப அழுத்தத்தையும் கொடுக்கும் முயற்சியாகும்.

அமெரிக்காவிடம் இருந்து THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைன் கோரியதாக உறுதிப்படுத்தப்படாத ரஷ்ய ஊடக அறிக்கையை சுட்டிக்காட்டிய Ryabkov, இது ரஷ்யாவை தூண்டும் செயல் Sergei Ryabkov தெரிவித்துள்ளார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.