இந்தியாவின் டிஜிட்டல் பிச்சைக்காரர்! வியப்பில் வாய்பிளக்கும் மக்கள்


பீகாரில் ராஜு படேல்(40) என்ற பிச்சைக்காரர் Bettiah ரயில் நிலையத்தில் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பீகாரில் உள்ள Bettiah ரயில் நிலையத்தில் ராஜு படேல்(40) என்ற பிச்சைக்காரர் ஒருவர் கழுத்தில் டிஜிட்டல் payment செய்வதற்கான QR குறியீடு அட்டையை மாட்டிக்கொண்டு அனைத்து விதமான ஆன்-லைன் கருணையையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துக்கொண்டு பிச்சை எடுத்து வருகிறார்.

மேலும் இவர் தன்னை முன்னாள் பீகார் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ்வின் தீவிரதொண்டன் என்றும், தற்போது பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனையால் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.


இது தொடர்பாக ANI ஊடகம் ராஜு படேலிடம் தொடர்புகொண்டு பேசிய போது, தான் இந்த ரயில் நிலையத்தில் சிறுவயது முதல் பிச்சையெடுத்து வருவதாகவும், தனக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது.

மேலும் மக்கள் அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வந்த பின் யாரும் கைகளில் பணம் வைத்து இருப்பது இல்லை, இதனால் எனக்கும் பிச்சையும் சரிவர கிடைக்காமல் கஷ்டப்பட்டேன்.

சில யோசனைகளுக்கு பிறகு நானும் வங்கிக்கு சென்று ஒரு சேமிப்புக்கணக்கை தொடங்கி, அதற்கான டிஜிட்டல் கணக்கையும் பெற்றேன்.

தற்போது இந்த டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்டுவருகிறேன். இதன் மூலம் வயிறை நிரப்பிக்கொள்கிறேன். பின் இந்த ரயில் நிலையத்திலேயே படுத்தும் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த வேடிக்கையான பிச்சையெடுக்கும் முறையை சிலர் தவிர்க்கமுடியாமல் உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒருவர் ” நினைத்து பாருங்கள் நாம் அவருக்கு பிச்சை அளிக்கும் போது cashback offer நமக்கு வந்தால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கும் என கூறி பதிவிட்டுள்ளார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.