இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோளுடன் பிப்ரவரி 14ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்! இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோளுடன் பிப்ரவரி 14ந்தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரை ஏராளமான செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி உள்ளது. இந்த நிலையில், துருவச் சுற்றுப்பாதையில் ஆய்வு செய்யும் வகையில்  1,710 கிலோ எடை உள்ள  பி.எஸ்.எல்.வி.-சி52  செயற்கைகோளை வரும் 14ந்தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளது.

நடப்பாண்டு இறுதியில் சந்திரயான்3 ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக ஏற்கனவே இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டை வரும் 14ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.

இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோள் சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப் பாதையில் சுற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறும் இஸ்ரோ,  திட்டமிட்டபடி வரு 14ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்படு இருப்பதாக அறிவித்து உள்ளது.

பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் 1,710 கிலோ எடை உள்ள இ.ஒ.எஸ்.-04 செயற்கைகோளுடன் மேலும்  2 சிறிய செயற்கைகோள்களையும் சுமந்து செல்கிறது.  இதற்கான கவுண்டவுன்  பிப்ரவரி 13-ந்தேதி காலை 4.29 மணிக்கு தொடங்கி 14-ந்தேதி காலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்துள்ளது.

கொலராடோவின் போல் டரில் உள்ள வளி மண்டல மற்றும் விண்வெளி ஆய்வகத்துடன் இணைந்து இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கழகத்தின் மாணவர் செயற்கைகோள், இஸ்ரோவில் இருந்து தொழில் நுட்ப டெமான்ஸ்ட்ரேட்டர் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.

இ.எஸ்.ஒ.-04 செயற்கைகோள் விவசாயம், வனவியல், தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம், நீரியல், வெள்ளம் போன்ற அனைத்து வானிலை நிலைகளிலும் உயர்தர படங்களை வழங்க வடிவமைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டில்,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டின் முதல் ஏவுதல் பணி பிப்ரவரி 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து துருவ செயற்கைக்கோள் ஏவுகணை (PSLV-C52) திங்கள்கிழமை 05:59 மணிக்கு ஏவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டு ஆகஸ்டில் ‘சந்திரயான்3’ விண்ணில் ஏவப்படும்! இஸ்ரோ தகவல்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.