உதடுகளில் புன்னகை.. கையிலோ மனைவியின் "தலை".. மொத்த நாடும் ஸ்தம்பிச்சுப் போச்சு!

ஈரான்
நாட்டில் தனது மனைவியைக் கொலை செய்து தலையை தனியாக துண்டித்து எடுத்து ஒரு கணவர் சாலையில் நடந்து சென்ற காட்சி ஈரான் நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் அந்த நாட்டின் நாடாளுமன்றம் வரை போய் விட்டது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மோனா ஹைதரி. 17 வயதுதான் இவருக்கு. இவரை இவரது கணவரும், மைத்துனரும் சேர்ந்து தலையை வெட்டிக் கொலை செய்துள்ளனர். ஆவாஸ் என்ற நகரில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Hijab Row: பெண்களை பள்ளிக்கு போக விடாமல் தடுப்பது.. பயங்கரமானது.. மலாலா கருத்து

கொலை செய்த பின்னர் தனது மனைவியின் தலையை தூக்கிக் கொண்டு தெருவில் வந்துள்ளார் ஹைதரியின் கணவர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி ஈரான் நாட்டையே உலுக்கி விட்டது. இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ந்து போன அந்த நாட்டின் துணை அதிபர் என்சீ கஸாலி, நாடாளுமன்றத்தில் இதுகுறித்து உணர்ச்சிகரமாக பேசினார். இதுபோன்ற வெறியர்களை ஒடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மேலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சமூக வலைதளங்களிலும் இந்த சம்பவம் வைரலானது. இதையடுத்து போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து ஹைதரியின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகியோரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து ஈரான் நாட்டின் பத்திரிகையான சஸாண்டகி எழுதியுள்ள தலையங்கத்தில், கொலைகாரன் தனது மனைவியின் தலையை கையில் தூக்கிப் பிடித்து புன்னகை பொங்க போஸ் கொடுத்துள்ளான். எவ்வளவு பெரிய அநீதி இது. எவ்வளவு கொடூரமானது இதை. இதை அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துள்ளனர். இதை எப்படி இந்த சமூகம் ஏற்கிறது. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று கூறியிருந்தது.

ஈரான் நாட்டின் பிரபல பெண்ணியவாதியும், திரைப்பட இயக்குநருமான தஹிமினா மிலானி கூறுகையில், சமூகத்தின் புறக்கணிப்புதான் மோனா ஹைதரியின் கொலைக்குக் காரணம். நாம் அனைவருமே இந்த கொடூரமான கொலைக்கு பொறுப்பு என்று குமுறியுள்ளார்.

மோனாவுக்கு 12 வயது இருக்கும்போதே திருமணம் செய்து வைத்துள்ளனர். அவருக்கு தற்போது 3 வயதில் மகன் உள்ளார். அவரது நடத்தை சரியில்லை என்று கூறித்தான் மோனாவின் கணவர், தனது அண்ணனுடன் இணைந்து இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளார். ஈரானில் சமீப காலமாக இதுபோன்ற கெளரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் இப்படித்தான் ஒரு நபர் தனது 14 வயது மகளைக் கொலை செய்து தலையைத் துண்டித்தார். அவருக்கு பின்னர் 9 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது கோர்ட்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.