ஏர்டெல் வாடிக்கையாளர்களே உஷார்.. மீண்டும் கட்டண உயர்வாம்.. பர்ஸ் காலி..!

இந்தியாவில் தற்போது பல துறையில் அதிகப்படியான போட்டி உருவாகியுள்ளது, அதிலும் குறிப்பாக டிஜிட்டல் பேமெண்ட், ஆட்டோமொபைல், ஆன்லைன் ரீடைல் வர்த்தகம் எனப் பல இருந்தாலும், இவை அனைத்திற்கும் அடித்தளமாக இருக்கும் டெலிகாம் துறையில் பிற துறைகளைக் காட்டிலும் அதிகப்படியான போட்டியும், வர்த்தகப் பாதிப்புகளும் உள்ளது.

வர்த்தகப் போட்டியின் காரணமாக அதிகளவிலான வருமானத்தை இழந்துள்ள டெலிகாம் நிறுவனங்கள் அடுத்தடுத்துக் கட்டணத்தை உயர்த்தி வருகிறது.

இந்நிலையில் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

கூகுள் – ஏர்டெல் முதலீடு.. இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் காரணம்..!

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

ஜியோவின் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனக்கான வர்த்தகத்தைத் தொடர்ந்து பெற துவங்கியுள்ள பார்தி ஏர்டெல் டிசம்பர் காலாண்டில் கட்டண உயர்வு, கூகுள் முதலீடு ஆகியவற்றின் மூலம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது.

கட்டண உயர்வு

கட்டண உயர்வு

இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் டெலிகாம் சேவை திட்டங்களின் கட்டண உயர்வு அடுத்த மூன்று மற்றும் நான்கு மாதத்தில் இல்லையென்றாலும் கட்டாயம் 2022ஆம் ஆண்டில் கட்டண உயர்வு இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

 அடுத்தக் கட்டண உயர்வு
 

அடுத்தக் கட்டண உயர்வு

மேலும் முன்பு போல் ஏர்டெல் நிர்வாகம் கட்டணத்தை உயர்த்துவதில் எவ்விதமான தயக்கத்தைக் காட்டாது. சந்தையில் முதல் ஆளாகக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றாலும் தயங்காமல் உயர்த்தப்படும் எனப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகம் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு தெரிவித்துள்ளது.

ARPU அளவீடு

ARPU அளவீடு

இதன் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது முக்கிய இலக்கான 200 ரூபாய் ARPU அளவீட்டை 2022ஆம் ஆண்டுக்குள்ளேயே எட்டிவிடும் என நம்புகிறது. ARPU என்பது ஒரு டெலிகாம் நிறுவனம் தனது மொத்த வாடிக்கையாளர்களிடம் இருந்து சராசரியாகப் பெறும் வருமானத்தின் அளவீடு.

டிசம்பர் காலாண்டு முடிவுகள்

டிசம்பர் காலாண்டு முடிவுகள்

பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் மொத்த லாபத்தின் அளவு 3 சதவீதம் சரிந்து 830 கோடி ரூபாய் மட்டுமே பெற்று உள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் அளவீடு 854 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்நிறுவனத்தின் வருவாய் 13 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

7500 கோடி ரூபாய் முதலீடு

7500 கோடி ரூபாய் முதலீடு

டிசம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ARPU அளவு 163 ரூபாயாக இருக்கும் நிலையில் 2022 முடிவதற்குள் 200 ரூபாய் அளவீட்டை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு உள்ளது. கூகுள் நிறுவனத்திடம் முதலீட்டை திரட்டிய பார்தி ஏர்டெல் கடன் பத்திரங்கள் வாயிலாக 7500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட நிர்வாகக் குழு ஒப்புதல் பெற்று உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Airtel wouldn’t hesitate on another tariff hike in 2022, ARPU may hit ₹200

Airtel wouldn’t hesitate on another tariff hike in 2022, ARPU may hit ₹200 ஏர்டெல் வாடிக்கையாளர்களே உஷார்.. மீண்டும் கட்டண உயர்வாம்.. பர்ஸ் காலி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.