ஐடி நிறுவனங்கள் 2022ம் நிதியாண்டில் 2.15 லட்சம் பணியாளர்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பணியமர்த்தியுள்ளன.
இது முந்தைய ஆண்டில் வெறும் 99,000 பேரை பணியமர்த்தியுள்ளன.
இந்தியா டாப் ஐடி நிறுவனங்கள் தங்களது பணியமர்த்தலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 8 நிறுவனங்கள் ஒரே வாரத்தில் ரூ.1.51 லட்சம் கோடி லாபம்..!
![தேவை அதிகரிப்பு](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/itsector5-1616673532.jpg)
தேவை அதிகரிப்பு
இது ஐடி துறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், திறனுக்கான தேவை என்பது பெரியளவில் அதிகரித்துள்ளது. ஆனால் அதே சமயம் அட்ரிஷன் விகிதம் என்பது பெரியளவில் அதிகரித்துள்ளது. ஐடி துறையில் நிலவி வரும் இந்த போக்கானது இன்னும் சில காலாண்டுகளுக்கு தொடரலாம் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
![ஐடி துறையில் பணியமர்த்தல்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/1644422252_385_job-temp-staff2-1643975143.jpg)
ஐடி துறையில் பணியமர்த்தல்
இந்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பிரெஷ்ஷர்களுக்கான பணியமர்த்தல் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. TWITCH (tcs, wipro, infosys, tech mahindra, cognizant, hcl tech) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தலில் முன்னிலையில் உள்ளன.
![பட்டையை கிளப்பிய TWITCH நிறுவனங்கள்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/cts-1629798970.jpg)
பட்டையை கிளப்பிய TWITCH நிறுவனங்கள்
இந்த TWITCH நிறுவனங்கள் தான்ம் நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 2.15 லட்சம் பணியாளர்களை பணியமர்த்தியுள்ளன. இது முந்தைய ஆண்டில் பாதியளவு கூட பணியமர்த்தவில்லை. காக்னிசண்ட் நிறுவனத்தின் பணியமர்த்தல் என்பது ஜனவரி – டிசம்பர் ஆண்டில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முரட்டுத் தனமான பணியமத்தலானது அட்ரிஷன் விகிதம் அதிகரித்த நிலையில் வந்துள்ளது.
![பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தல் விகிதம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/it-1619086379.jpg)
பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தல் விகிதம்
- டிசிஎஸ் FY2021 – 40,000 பேர்
- டிசிஎஸ் FY2022 – 78,000 பேர்
- காக்னிசண்ட் FY2021 – 17000 பேர்
- காக்னிசண்ட் FY2022 -33000 பேர்
- இன்ஃபோசிஸ் FY2021 -21000 பேர்
- இன்ஃபோசிஸ் FY2021 -55000 பேர்
- விப்ரோ FY2021 – 9000 பேர்
- விப்ரோ FY2022 – 17,500 பேர்
- ஹெச்.சி.எல் டெக் FY2021 – 12,000 பேர்
- ஹெச்.சி.எல் டெக் FY2022 – 22,000 பேர்
- டெக் மகேந்திரா FY2021 – சுமார் 3 மடங்கு
- டெக் மகேந்திரா FY2022 – 10,000 பேர்
![அட்ரிஷன் விகிதம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/salary014542-1643370744.jpg)
அட்ரிஷன் விகிதம்
காக்னிசண்ட் நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதமானது 31% அதிகரித்துள்ளது. இது இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் முறையே 25.5% மற்றும் 24%, 22.7% ஆக உள்ளன. இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இது நடப்பு காலாண்டுகளிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது பணியமர்த்தல் விகிதங்களை தொடர்ந்து அதிகமாக வைத்திருக்க உதவும்.
![எந்த நிறுவனத்தில் என்ன விகிதம்?](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/it-techie-601-02-1644417356.jpg)
எந்த நிறுவனத்தில் என்ன விகிதம்?
- காக்னிசண்ட் – 31%
- இன்ஃபோசிஸ் – 25.50%
- டெக் மகேந்திரா – 24%
- விப்ரோ – 22.70%
- ஹெச்.சி.எல் டெக் – 19.80%
- டிசிஎஸ் – 15.30%
![காக்னிசண்ட் கருத்து](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/cognizant-152-1610452454.jpg)
காக்னிசண்ட் கருத்து
இது குறித்து காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரையன் ஹம்பரீஸ், தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் திறனுள்ள ஊழியர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. அட்ரிஷன் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது துறையில் பல சவால்களை ஏற்படுத்தலாம்.
![இன்ஃபோசிஸ்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/infosys55201-1644417366.jpg)
இன்ஃபோசிஸ்
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் CFO, இத்துறையில் அட்ரிஷன் விகிதமானது அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய துறையில் நிலவி வரும் மிகப்பெரிய சவாலாகும். இதனால் பிரெஷ்ஷர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். இது பிரெஷ்ஷர்களுக்கு வாய்ப்பினை கூட்டுகிறது. இது ஊழியர்களின் திறனுக்கு ஏற்ப கிடைக்கலாம்.
![ஏன் பிரெஷ்ஷர்கள்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/job-1-1644417448.jpg)
ஏன் பிரெஷ்ஷர்கள்
நிபுணர்கள் தேவை அதிகம் உள்ள இந்த சமயத்தில் திறனுள்ள ஊழியர்களுக்கு அதிக தேவை இருந்து வருகின்றது. எனினும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதே பிரெஷ்ஷர்களுக்கு பணியமர்த்தலானது செலவினை குறைக்க உதவும். இதன் காரணமாகத் தான் நிறுவனங்கள் பிரெஷ்ஷர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்துகின்றன.
![அதிரடி திட்டம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/itcompanies-1644417464.jpg)
அதிரடி திட்டம்
காக்னிசண்ட் நிறுவனம் 2022ம் ஆண்டில் 50,000 பேரை பணியமர்த்தலாம். இதே 2023ம் நிதியாண்டில் ஹெச்.சி.எல் டெக் 40,000 – 45,000 பேர் பணியமர்த்தலாம் என திட்டமிட்டுள்ளது. விப்ரோ 30000 பேரையும், டெக் மகேந்திரா 15000 பிரெஷ்ஷர்களையும், டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் தங்களது அறிவிப்பினை இன்னும் வெளியிடவில்லை.
IT companies double down on fresher hiring as attrition hikes
IT companies double down on fresher hiring as attrition hikes/ ஐடி நிறுவனங்களின் அதிரடி திட்டம்.. டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ், சொல்வதென்ன?