"கொஞ்சம் கஷ்டம்தான் வாழ்வதும் வாழ விடுவதும்…" – உடல் குறித்த கேலிக்கு காஜல் அகர்வாலின் பதிவு!

காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு பல படங்களில் நடித்தவர். தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்தார். கடந்த வருடம் அக்டோபரில் கௌதம் கிச்சலு-காஜல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது தன் புகைப்படத்துடன் காஜல் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர் எழுதியுள்ள பதிவின் தமிழாக்கம் இதோ,

” இந்த வாழ்க்கையில், என் உடலில் என் வீட்டில் மிக குறிப்பாக என்னுடைய பணியிடத்தில் நிறைய மாற்றங்களை சமீபமாக நான் சந்தித்து வருகிறேன். கூடவே, பயனற்ற சில கருத்துக்கள், உடல் கேலி பதிவுகள், மீம்களையும் கடந்து கருணையோடு நடந்துகொள்ள கற்றுக்கொள்வோம், கொஞ்சம் கஷ்டம் தான் வாழ்வதும் வாழ விடுவதும். இதைப் போலான வாழ்க்கை சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு என்னுடைய சில கருத்துகளை இங்கு பகிர்கிறேன். மிக நிச்சயமாக இதனை புரிந்து கொள்ளாத சுயநல முட்டாள்கள் இதனை படிக்க வேண்டும்.”

“கர்ப்ப காலத்தில், நம்முடைய உடல் பல மாற்றங்களை சந்திக்கிறது, உடல் எடை கூடுவதையும் சேர்த்து. ஹார்மோனல் மாற்றங்கள் குழந்தைக்கு ஊட்டமளிக்க நம்முடைய வயிரையும் மார்பகங்களையும் வளரச் செய்கிறது. சிலருக்கு உடல் பெரிதாவதால் வரிவரியாக தழும்புகளும் ஏற்படும். சில சமயம் தோல், பருக்களால் நிறையும். வழக்கத்தை விட அதிகமாக சோர்ந்து போவோம். மனநிலை ஏற்ற இறக்கங்களும் இருக்கும். நெகட்டிவான மனநிலை, நமது உடல் குறித்து ஆரோக்கியமற்ற அல்லது நெகட்டிவான எண்ணங்களை தோன்றச் செய்யும்.

அதேபோல, குழந்தை பெற்றெடுத்த பிறகு, பழைய மாதிரி நாம் மாறுவதற்கு சில காலம் எடுக்கலாம். மாற முடியாமலே போகலாம். அது ஓகே தான் ” என்கிறார்.

மேலும், “இவையெல்லாம் இயற்கையானது. நமது வாழ்வில் புதிதாக ஒன்று இணையவுள்ளதற்கு நாம் போராடுகிறோம் (நமது சிறிய மனிதர்களை வரவேற்கும் ஆவலுடன்) அசாதாரணமாக உணர இதை எதுவுமில்லை, நாம் ஒரு பெட்டிக்குள் நம்மை சுருக்கிக் கொண்டு, ஒரு ஸ்ட்ரியோடைப்புக்குள் இருக்க வேண்டும் என்பதில்லை. வாழ்வின் அழகான, பிரமிப்பான மற்றும் அற்புதமான கட்டத்தில் நாம் அழுத்தத்திலும் சகித்துக்கொள்ளாமலும் இருக்க வேண்டியதில்லை. குழந்தை பெற்றெடுப்பதில் உள்ள நிலைகளை நினைவில் கொள்வோம், நாம் அவற்றை அனுபவிக்க கொடுத்து வைத்தவர்கள். இந்த பதிவு உங்களுக்கும் உதவக் கூடும், அற்புத கட்டத்தில் என்னோடு பயணிக்கும் எல்லோருக்கும் அன்பு.” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பதிவுக்கு நடிகைகள், காஜலின் ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.