எப்போது பார்த்தாலும் ஸ்மார்ட்ஃபோனும், கையுமாக திரிந்து கொண்டிருக்கும் இன்றைய இளம் தலைமுறையை கெடுப்பதில்
ஆபாச இணையதளங்கள்
முதலிடம் வகிக்கின்றன என்று சொல்லலாம். அந்த அளவுக்கு செல்ஃபோனை தட்டினால் நூற்றுக்கணக்கான ஆபாச இணையதளங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
இவற்றில் வரும் பலான படங்களை இரவு தூக்கம் தொலைத்து கண்விழித்து விடியி விடிய பார்க்கும் சிறுவர்களின் உடல் மற்றும் மனநலம் கெடுவதுடன், படிப்பும் கெட்டு, அவர்களின் எதிர்காலமே கெடும் அபாயம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டே உலகின் பல்வேறு நாடுகள், ஆபாச இணையதளங்களுக்கு தொடர்ந்து தடை விதித்து வருகின்றன. இருப்பினும் சைபர் க்ரைம் போலீசின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, நூற்றுக்கணக்கான ஆபாச இணையதளங்கள் கூகுளில் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன.
உதடுகளில் புன்னகை.. கையிலோ மனைவியின் “தலை”.. மொத்த நாடும் ஸ்தம்பிச்சுப் போச்சு!
உலக அளவில் புதிது புதிதாக உருவாகிவரும் ஆபாச இணையதளங்களை முற்றிலும் ஒழிப்பது கடும் சவாலான விஷயமாக இருப்பதால், இந்த இணையதளங்களை சிறுவர்கள் பார்ப்பதை முற்றிலும் தடுக்கும் நோக்கில் பல்வேறு கடுமையான நிபந்தனைகளை செயல்படுத்த
பிரிட்டன் அரசு
திட்டிமிட்டுள்ளது.
இதில் முக்கியமாக, ஆபாச இணையதளங்களுக்கு உள்ளே நுழையும்போது, நீங்கள் 18 வயது நிரம்பியவரா என கேட்கப்படும் கேள்விக்கு , இனி சிறுவர்கள் ஆம் என்று எளிதாக பதிலளித்துவிட்டு உள்ளே நுழைந்து பலான படம் பார்க்க முடியாது. இதற்கு செக் வைக்கும் விதத்தில், ஆபாச இணையதளங்களை பார்ப்போர் 18 வயதை கடந்தவர்களா என்பதை உறுதி செய்ய கிரெடிட் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட தகவல்களை பதிவிடும் முறையை அமல்படுத்த பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் 105 படகுகள் – ஏலம் விடும் பணி துவக்கம்!
சிறுவர்களின் பெயரில் வங்கிகள் கிரெடிட் கார்டு தருவதில்லை என்பதால், இந்த கார்டு உள்ளிட்ட தகவல்கள் சிறுவர்களுக்கு கிடைக்கப் பெறாது என்பதால் அவர்கள் ஆபாச இணையதளங்களில் மேய்வது இனி தடுக்கப்படும் என்று பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.