ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார்.. ஆங்கிலப் படத்தை அழகு தமிழில் பாராட்டிய வைரமுத்து!

ஹாலிவுட் இயக்குநர் ஆடம் மெக்கே இயக்கத்தில் லியர்னாடோ டிகாப்ரியோ, ஜெனிபர் லாரன்ஸ் நடித்துள்ள படம் ‘
டோன்ட் லுக் அப்
’. இப்படம் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் அண்மையில் ரிலீஸ் செய்யப்பட்டது.

உன்னை மாதிரி லூஸா? ச்சீ… மூடிட்டுப்போ… ஜூலியை வச்சு வச்சு செய்யும் வனிதா!

ஓடிடி தளத்தில் வெளியான போதும் இப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பூமியை நோக்கி வரும் ஒரு விண்கல்லை பற்றி தெரிந்துகொள்ளும் இரண்டு விஞ்ஞானிகளை சுற்றி நடக்கும் கதையை பருவநிலை மாற்றம் அமெரிக்க அரசியல் ஆகியவற்றை கலந்து ரசிக்கும் வகையில் படமாக்கியுள்ளனர்.

தாராளம் காட்டும் தனுஷ் பட நடிகை… திணற வைக்கும் போட்டோஸ்!

இந்நிலையில் இந்தப் படத்தை கவிஞர்
வைரமுத்து
தனது அழகு தமிழில் பாராட்டி டிவிட்டியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,

“விண்கோள் ஒன்று

மோதப்போவதால்

பூமி

சிதறப்போகிறதென்று

பதறிச் சொல்கிறார்கள்

நாசா விஞ்ஞானிகள்

அமெரிக்க ஜனாதிபதி

சிகரெட் பிடித்துக்கொண்டே

சிரிக்கிறார்

உலகம்

நகையாடுகிறது

கடைசியில்

அது நிகழ்ந்தே விடுகிறது

அழகான ஆங்கிலப் படம்

Don’t Look Up

(மேலே பார்க்காதே)

நீங்கள் மேலே பாருங்கள்”

உழைப்பை உதாசீனப்படுத்தும்போது வலிக்கிறது… திடீரென நிறுத்தப்பட்ட சீரியல்.. கொதிக்கும் பிரபல நடிகை!

இவ்வாறு வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஆங்கில படங்களை அவ்வப்போது பார்க்கிறீர்கள் என்பது சூப்பர் ( பார்த்த படத்தை மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வது கூடுதல் மகிழ்ச்சி) புத்தகம் வாசிக்க நேரம் இல்லை என்று சொல்லும் பலர், இப்படி நல்ல படங்களை உங்கள் Reference மூலம் பார்க்க துவங்கட்டும். நல்ல பதிவு என கவிஞர் வைரமுத்துவை பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.