ஜிஹாப் பிரச்சினை : கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

பெங்களூரு

ஜிஹாப்  பிரச்சினை குறித்து கடும் பதட்டம்  நிலவுவதால் கர்நாடகாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சமீபத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பு அரசு கல்லூரியில் இஸ்லாம் மாணவிகள் ஜிஹாப், பர்தா,, புர்கா போன்ற உடைகளை அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெர்வித்தனர்.  இதையொட்டி அரசு ஜிஹாப் அணியத் தடை விதித்தால் இஸ்லாமிய மாணவிகள் 6 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, சிக்மகளூர் பகுதிகளில் ஜிஹாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை.   எனவே நேற்று மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 

இதை எதிர்த்து இந்துவா அமைப்பு மாணவர்கள் காவி துண்டுடன் வந்து அங்கு ஜெய்ஸ்ரீராம் என்னும் கோஷம் எழுப்பினர்.  இதைக் கண்டித்து பாபா சாகேபம்பத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டுடன் வந்து ஜெய்பீம் என கோஷங்கள் எழுப்பினர்.  இதனால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.   மாணவர்கள் போராட்டம் கடலோர மாவடங்களில் இருந்து மேலும் பல இடங்களுக்குப் பரவியது.

நேற்று ஹாசன் அரசு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை காவி துண்டு அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு ‘ஜெய் ராம்’ என முழக்கம் எழுப்பினர்.  ஆனால் அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக ‘அல்லாஹு அக்பர்’என முழக்கம் எழுப்பிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த ஜிஹாப் விவகாரம் தீவிரமாகி உள்ளதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.   இது குறித்து தற்போது டில்லியில் உள்ள கர்நாடக முதல்வர் அமைச்சர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்தார்.   இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் முதல்வர், “தயை கூர்ந்து கர்நாடகாவில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி,  கல்லூரி நிர்வாகத்தினர், கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

தற்போது ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது. விரைவில் நீதிமன்ற வழிகாட்டுதல்கள், கர்நாடகாவில் நிலவும் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சீருடை விவகாரத்தில் முடிவெடுக்கப்படும்.  எனவே அனைவரும் பொறுமை காத்து மாநிலத்தில் அமைதி நிலவ வழி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்’.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.