டிஜிட்டல் வாக்காளர் அட்டை பெறுவது எப்படி.. ரொம்ப ஈசி.. வெறும் 5 நிமிடம் போதும்..!

இந்தியாவில் பெரும்பாலான அரசு சேவைகள் தற்போது ஆன்லைன் மூலம் கிடைக்கப்படும் நிலையில் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிதாக மாறிய நிலையில்,
நீங்கள் வாக்காளர் அட்டையைத் தொலைத்துவிட்டால் கூடப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

எல்ஐசி பாலிசி உங்களிடம் இருக்கா.. அப்போ 5% டிஸ்கவுண்ட் கட்டாயம் கிடைக்கும்..!

 டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை மூலம் தொலைந்துபோன வாக்காளர் அடைக்கு டூப்ளிகேட் வாக்காளர் அட்டை பெற விண்ணப்பிக்க அல்லது ஆன்லைனில் முகவரியை மாற்றுவதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது.

 முகவரி மாற்றம்

முகவரி மாற்றம்

இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டை மூலம் நீங்கள் உங்கள் இருப்பிடத்தை வேறு நகரம் அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்றும்போது, ஒவ்வொரு முறையும் புதிய வாக்காளர் அட்டையை உருவாக்குவதில் சிரமம் இருக்காது.

e-EPIC

e-EPIC

நீங்கள் ஆன்லைனில் முகவரியை மாற்றலாம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட முகவரியுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். வாக்காளர் புகைப்படக் கொண்ட அடையாள அட்டையை EPIC என அழைக்கப்படுகிறது, இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையை e-EPIC என அழைக்கப்படுகிறது.

டிஜிலாக்கர்
 

டிஜிலாக்கர்

e-EPIC என்பது உங்களது வாக்காளர் அட்டையின் பிடிஎப் வெர்ஷன் தான், இதை நீங்கள் மொபைலில் கூட வைத்துக்கொள் முடியும். இதேபோல அரசின் டிஜிலாக்கர்-ல் அப்லோடு செய்தோ அல்லது பிரின்ட் செய்தோ வைத்துக்கொள்ள முடியும். இதை PVC வடிவில் வரும் வாக்காளர் அட்டைக்குப் பதிலாகவும் பயன்படுத்த முடியும்.

டிஜிட்டல் வாக்காளர் அட்டை பெறுவது எப்படி..?!

டிஜிட்டல் வாக்காளர் அட்டை பெறுவது எப்படி..?!

  • டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voterportal.eci.gov.in அல்லது https://nvsp.in/ தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • என்விஎஸ்பி தளத்தில் முதலில் உங்களுக்கான கணக்கை ஈமெயில் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றைக் கொடுத்து உருவாக்க வேண்டும். ஏற்கனவே இத்தளத்தில் உங்களுக்குக் கணக்கு இருந்தால் உரிய பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள்நுழையவும்.
  • என்விஎஸ்பி தளத்தில் கணக்கை உருவாக்க, நீங்கள் வாக்காளர் அட்டை பற்றிக் கேட்கப்படும் அனைத்து விவரங்களை உள்ளிட வேண்டும். எல்லா விவரங்களையும் உள்ளிட்ட பிறகு ஒரு லாக்இன் ஐடி உருவாக்கப்படும். இப்போது போர்ட்டலில் உள்நுழைக.
  • உள்நுழைந்த பிறகு, EPIC எண் அல்லது படிவ குறிப்பு எண்ணை பதிவிட்டு, உரிய மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • வாக்காளர் எண் பதிவு செய்யப்பட்ட எண்ணில் OTPயைப் பெறுவீர்கள், OTP ஐ உள்ளிட உடன், டவுன்லோடு e-EPIC என்பதைக் கிளிக் செய்யவும். வாக்காளர் அடையாள அட்டையின் PDF படிவத்தை பதிவிறக்கம் செய்யப்படும். அவ்வளவு தான் வேலை முடிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to download digital voter ID card online in 5 minutes

How to download digital voter ID card online in 5 minutes டிஜிட்டல் வாக்காளர் அட்டை பெறுவது எப்படி.. ரொம்ப ஈசி.. வெறும் 5 நிமிடம் போதும்..!

Story first published: Wednesday, February 9, 2022, 22:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.