பாஸ்டேக் மூலம் ரூ.26 ஆயிரம் கோடி வசூல்: மத்திய அமைச்சர் தகவல்| Dinamalar

புதுடில்லி: கடந்த ஜனவரி மாதம் வரை பாஸ்டேக் மூலமாக ரூ.26,622.93 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் அளித்துள்ளார்.

சுங்கச் சாவடிகளில், வாகனங்களுக்காக சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் பாஸ்ட்டேக் வசதி நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக, ‘பாஸ்டேக்’ எனப்படும், மின்னணு அட்டைகள் வழங்கப்படுகின்றன. பாஸ்ட்டேக் மூலம் பெறப்படும் வருவாய் தொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், ‛கடந்த ஜனவரி 31, 2022 வரை 4.59 கோடி பாஸ்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலம் பெறப்பட்ட கட்டணம் 2020ம் நிதியாண்டில் 10,728.52 கோடி ரூபாய் வசூலானது. கடந்த ஜனவரி மாதம் வரை ரூ.26,622.93 கோடி வசூலாகியுள்ளது,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.