
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் இந்திய ராணுவ சீருடையில் வலம் வந்து ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்த நிலையில் ராஜஸ்தான் போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சக்திபால் சக் என்ற பெயரிட்ட அந்த நபர் ராஜஸ்தானின் சிறிய டவுண் ஒன்றில் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் ராணுவ சீருடையில் சென்று நட்புகொண்டு தகவல்களைப் பெற்று பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ராணுவ வாகனங்களின் புகைப்படங்கள், ரகசிய ஆவணங்கள் போன்றவை அவருடைய மொபைலில் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுவரை 900 ஆவணங்களை சக்திபால் சிங் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.