அதிமுக வேட்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை! – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான தகவலில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36- வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க-வை சார்ந்த ஜானகிராமன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்கொலை

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட உடன், சம்பவ இடத்துக்கு விரைந்த காஞ்சிபுரம் காவல்துறை, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் 10 நாள்களே இருந்த நிலையில், ஜானகிராமனின் இந்த மரணம் அ.தி.மு.க-வினர் மத்தியிலும், அப்பகுதி மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கடைக்கோடி கிராமம்: கொஞ்சம் தவறினாலும் மரணம் நிச்சயம்! – ஆற்றைக் கடக்கப் போராடும் மக்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.