ஆந்திர முதல்வரை சந்திக்க ஒரே விமானத்தில் பயணித்த நடிகர்கள்

ஆந்திர மாநிலத்தில் கடந்த வருடம் சினிமா டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த அம்மாநில அரசு உத்தரவிட்டது. மிகப் பெரும் பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் அவ்வளவு குறைந்த கட்டணத்தை வசூலித்தால் தியேட்டர்காரர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைக்காது.

இது தொடர்பாக தெலுங்குத் திரையுலகத்தினர் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். ஆந்திர மாநில மந்திரிகளுடனும் சிலர் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோர் இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துப் பேச ஐதராபாத்திலிருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

இதற்கான தனி விமானத்தில் ஐதராபாத்திலிருந்து விஜயவாடா சென்றனர். இன்று மகேஷ்பாபுவின் திருமண நாள் என்பதால் விமானத்திலேயே அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து அவருக்கு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.

சற்று முன்னர் ஆந்திர முதல்வருடனான பேச்சு வார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.