ஐயோ…! கூச்சமாக இருக்கு…! வீட்டிற்கு வெளியே போனாலே எல்லாரும் என்னை இப்படிதா அழைக்கிறாங்க…!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை
சமந்தா
. ‘
பாணா காத்தாடி
‘ திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான சமந்தா ‘நீ தானே என் பொன்வசந்தம்’, ‘
மெர்சல்
‘, ‘
சூப்பர் டீலக்ஸ்
‘ ‘
தெறி
‘ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் சமந்தாவின் அறிமுகப் படமே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ரீமேக்தான். அந்தப் படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் ஒன்றாக நடித்தவர்களின் நட்பு காதல் ஆனது. 2017-ம் ஆண்டு இருவருக்கும் இந்து- கிறிஸ்தவ முறைகளின்படி கோவாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள திருமணம் நடைபெற்றது.

விக்ரமின் ‘சியான் 61’ இவர் கூடதான்… மெட்ராஸ் படத்தின் போதே சொன்ன கதை!

திருமணத்திற்கு பிறகு படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், உடற்பயிற்சி, தோட்டக்கலை, ஆடை வணிகம் என பல முகங்களோடு வலம் வந்தார் சமந்தா.இந்நிலையில், சமீபத்தில் அவரது சமூக வலைத்தள பக்கங்களில் ‘சமந்தா அக்கினேனி’ என வைத்திருந்த பெயரை ‘S’ என மாற்றினார். இதையடுத்து, சமந்தா- நாக சைதன்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள், மண விலக்கு கோரி விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கின.

தற்போது இருவரும் பிரிந்த நிலையில் சமந்தா திரைப்படத்தில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம்காட்டி வருகின்றார். சமீப காலமாக ஆங்கில ஆல்பம் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் பெருமளவில் பிரபலமாகி வருகிறது. எனது பெயர் இதுதான். ஆனால், என்னை இப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என்பதுதான் அந்தப் பாடலின் பொருள். இந்நிலையில் நடிகைகள் சிலர் தனது உண்மையான பெயரையும், தான் நடித்த படங்களின் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் சமந்தாவும் அனைவரையும் கவரும் வகையில் அசத்தலான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் தனது பெயர் சமந்தா எனவும், தான் நடித்த அனைத்து படங்களின் கதாபாத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்டு இப்படியெல்லாம் என்னை அழைக்கிறார்கள் என குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.