கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் வர்த்தகத்துறைக்கான ஆலோசகர் மட்டக்களப்பு விஜயம்

மட்டக்களப்புக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் வர்த்தகத்துறைக்கான ஆலோசகர் டேனியல் வூட் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பொருளாதார சமூகம் சர்ந்த பல விடயங்கள் விரிவாக ஆரயப்பட்டதுடன் எதிர்காலத்தில் கனேடிய அரசாங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.