‛சத்தியமா எனக்கு கல்யாணம் இல்லை' – நம்புங்க என்கிறார் பிரேம்ஜி

இசை அமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி. காமெடியனாக நடித்து வரும் பிரேம்ஜி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு இசையும் அமைத்தும் உள்ளார். இவர் திருமணம் செய்ய மாட்டேன் என ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால் அவரும் பாடகி வினய்தாவும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வைத்து இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வந்தது. ஆனால் இதனை பிரேம்ஜி மறுத்துள்ளார்.

இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‛‛சத்தியமா எனக்கு கல்யாணம் இல்லை. என்னை நம்புங்க. ஒரே ஒரு போட்டோவை போட்டேன். உடனே இப்படி செய்தி பரப்பிவிட்டனர். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஜாலியாக உள்ளது. நான் திருமணம் செய்யணும்னு நினைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருப்பேன். இப்போது என் வாழ்வில் திருமணம், குழந்தை மாதிரியான விஷயங்கள் எதுவும் கிடையாது. நான் ஒரு விஷயத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறேன். அதனால் எழுதுபவர்கள் எழுதட்டும், பேசுபவர்கள் பேசட்டும். அடுத்து நான் வைத்துள்ள முரட்டு சிங்கிள் டி-ஷர்ட் போட்டு, சாமியார் மாதிரி ஒரு போட்டோ போட்டால் அதை மறந்துடுவாங்க. என் வாழ்வில் எந்த மாற்றமும் வராது. நான் அதையெல்லாம் தாண்டி விட்டேன். திருமணம் செய்ய சொல்லி கேக்குறாங்க, நான் தெளிவாக உள்ளேன். என் வாழ்வில் திருமணம் கிடையாது அடுத்து படங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.