சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை வண்டியில் ஏற்றி கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை <!– சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை வண்டியில் ஏற்றி கடத்த… –>

திருக்கோவிலூரில் சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை சில மர்ம நபர்கள் வண்டியில் ஏற்றி கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இம்மாதம் ஒன்றாம் தேதி இரவு சாலையில் படுத்து கிடந்த 8 பசு மாடுகள் மறுநாள் காலை மாயமாகின.

மாட்டின் உரிமையாளர்களுள் ஒருவர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் சரக்கு வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் மாடுகளின் கழுத்தில் கயிறு கட்டி, அவற்றை சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றது தெரியவந்தது.

அவர் அளித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.