ஜனவரி 26.., டார்க் கிராடோஸ் இ-பைக் விற்பனைக்கு வருகின்றது

வரும் ஜனவரி 26 ஆம் தேதி விற்பனைக்கு டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் மாடலாக கிராடோஸ் வெளியிடப்பட உள்ளது.
2016 ஆம் ஆண்டு முதன்முறையாக T6X என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது பல்வேறு மேம்பாடுகளை பெற்றுள்ள இந்த மாடல் ஆனது உற்பத்தி நிலை மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. வெளியிடப்படும் அன்றைக்கு முன்பதிவும் தொடங்கப்பட்டு மார்ச் முதல் வாரத்தில் டெலிவரியும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

125 சிசி – 150 சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் சந்தையில் மிக சிறப்பான எலக்ட்ரிக் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ள கிராடோஸ் எலக்ட்ரிக் பைக் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

லித்தியம் ஐன் பேட்டரி ஒரு மணி நேரத்துக்குள்ளாக 80 சதவீத சார்ஜ் ஏறும் வசதி கொண்டதாக இருக்கும்.  ஒரு முறை முழுமையான சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கும் வகையில்மிக சிறப்பான பேட்டரி திறனை பெற்றதாக டார்க் டி6எக்ஸ் விளங்கும் வகையில் உள்ள பேட்டரியின் ஆயுட்கால வாரண்டி 80,000 கிலோமீட்டர் முதல் 1,00,000 கிமீ வரை அல்லது 3 முதல் 5 வருடங்கள் தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நீரால் எவ்விதமான பாதிப்பும் அடையாத வாட்டர் ப்ரூஃப் பாதுகாப்பை கொண்ட பேட்டரி 6 கிலோ வாட் மோட்டார் கொண்டு டியூப்லெர் ஸ்டீல் ஸ்வின்கிராம் இணைக்கப்பட்ட டெர்லிஸ் ஃபிரேம் பெற்றதாக வரவுள்ளது.  முன்பக்கத்தில் டெஸ்கோபிக் ஃபோர்க்குடன் கூடுதலாக டிஸ்க் பிரேக் ஆப்ஷனை டயரில் பெற்றுள்ளது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் , ரியர் டிஸ்க் பிரேக்கை பெற்றுள்ளது. மேலும் அடிப்படை பாதுகாப்பு அம்சமாக சிபிஎஸ் பிரேக்கை கொண்டுள்ளது.

டார்க் கிராடோஸ் விலை ரூ.1.60 லட்சத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.