தலைவர் 169 படத்தில் இணையும் முன்னணி ஹீரோ? இது லிஸ்ட்லயே இல்லையே பா..!

தற்போது ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருப்பது ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பு தான். அண்ணாத்த படத்திற்கு பிறகு
ரஜினி
அடுத்ததாக யாருடன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது பல மாத கேள்வியாக இருந்தது. பல இயக்குனர்கள் ரஜினியிடம் கதை சொல்லியதாகவும் தகவல்கள் வந்தது.

கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், தேசிங்கு பெரியசாமி, வெங்கட் பிரபு போன்ற பல இயக்குனர்கள் ரஜினியிடம் கதை சொல்லியதாக பேசப்பட்டது. ஆனாலும் ரஜினி எந்த வித அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார். இடையில் அவரது மூத்த மகளின் விவாகரத்து செய்தியால் சோகத்தில் இருந்த ரஜினி, இனி படங்களில் நடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்தது.

தலைவர் 169 இந்த படத்தின் ரீமேக்கா ? வெளியான சூப்பர் தகவல்..!

இந்நிலையில் தற்போது ரஜினி தன் அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பீஸ்ட் படத்தை இயக்கிவரும் இளம் இயக்குனரான
நெல்சன்
ரஜினியை இயக்கவிருக்கிறார். சில நாட்களாகவே இந்த விஷயம் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

கலக்கலாக ஒரு ப்ரோமோவின் மூலம் இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு
அனிருத்
இசையமைக்கவுள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது ஒரு செய்தி மிகவும் வைரலாக பரவிவருகிறது. என்னவென்றால் நெல்சன் இதுவரை இயக்கிய படங்களில் சிவகார்த்திகேயனின் பங்கு இருந்துள்ளது.

நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலாவில் பாடல் எழுதியுள்ளார் மற்றும் டாக்டர் படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். பீஸ்ட் படத்தில் கூட அரபிக் குத்து எனும் பாடலை எழுதியுள்ளார்
சிவகார்த்திகேயன்
.

எனவே நெல்சன் இயக்கவிருக்கும் ரஜினியின் படத்திலும் சிவகார்த்திகேயனின் பங்கு இருக்கும் என ரசிகர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இதுபோக சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பதால், அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரஜினி படத்தில் தன் பங்கை அளிப்பார் என்பது பொதுவான கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.