திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை <!– திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை –>

விலங்குகளின் நலன் கருதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதன் அடிப்படையில், தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் மாலை 6 மணிக்கு 10 மற்றும் 12 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும், இரவு 9 மணிக்கு மேல் எந்த ஒரு வாகனங்களும் செல்ல முடியாதபடி வனத்துறையினர் சாலையில் தடுப்பு அரண்கள் அமைத்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.