"நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும்" – அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவையில் கீழ்காணும் தகவல்களை இன்று வழங்கியுள்ளார்.
“ இந்தியாவில் புதிய பசுமை  விமான நிலையங்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வழங்கும் பசுமை விமான நிலையக் கொள்கை, 2008-ஐ இந்திய அரசு வகுத்துள்ளது.
நாடு முழுவதும் 21 பசுமை  விமான நிலையங்கள். அதாவது கோவாவில் உள்ள மோபா, மகாராஷ்டிராவில் நவி மும்பை, ஷிர்டி மற்றும் சிந்துதுர்க், கர்நாடகாவில் கலபுரகி, பிஜப்பூர், ஹாசன் மற்றும் ஷிமோகா, மத்தியப் பிரதேசத்தில் டாடியா (குவாலியர்), உத்தரப் பிரதேசத்தில் குஷிநகர் மற்றும் நொய்டா (ஜெவார்), குஜராத்தில் தோலேரா மற்றும் ஹிராசர், புதுச்சேரியில் காரைக்கால், ஆந்திராவில் தகதர்த்தி, போகாபுரம் மற்றும் ஒரவக்கல், மேற்கு வங்கத்தில் துர்காபூர், சிக்கிமில் பாக்யோங், கேரளாவில் கண்ணூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் ஹோலோங்கி (இட்டாநகர்) ஆகிய இடங்களில் அமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மோபா, நவி மும்பை, ஷிர்டி, நொய்டா (ஜெவார்), தோலேரா, ஹிராசர், போகாபுரம், கண்ணூர் மற்றும் குஷிநகர் ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்களாகவும், மீதமுள்ளவை உள்நாட்டு விமான நிலையங்களாகவும் திட்டமிடப்பட்டுள்ளன.
இவற்றில் துர்காபூர், ஷிர்டி, சிந்துதுர்க், பாக்யோங், கண்ணூர், கலபுர்கி, ஒரவகல் மற்றும் குஷிநகர் ஆகிய எட்டு விமான நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.” எனத் தெரிவித்தார்.
Source: PIB
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.