பென்ஸ் கார் கிப்ட்-ஆ.. ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி.. கார் விலை என்ன தெரியுமா?!

ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வை கூட போராடி வாங்க வேண்டியிருக்கும் நிலையில், கேரளாவில் ஒரு நிறுவனத்தின் முதலாளி தன் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றும் ஒரு அதிகாரிக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இது மாதிரி முதலாளி எல்லாம் எங்க இருக்காங்க என்பது தான் பெரும்பாலானவர்களின் மையின் வாய்ஸ் ஆக உள்ளது.

ரூ.1500 கோடி சம்பளமா.. சன் டிவி கலாநிதி மாறன், காவேரி கலாநிதி சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு..!

 MyG நிறுவனம்

MyG நிறுவனம்

கேரளாவில் டிஜிட்டல் ரீடைல் ஸ்டோரான MyG நிறுவனத்தின் முதலாளி தான் ஏகே ஷாஜி, இவரிடம் சுமார் 22 வருடமாகப் பணியாற்றி வரும் சிஆர் அனிஷ் என்பவர் பல பிரிவுகளின் பல கட்டங்களில் பணியாற்றி தற்போது MyG நிறுவனத்தின் தலைமை வர்த்தக வளர்ச்சி அதிகாரியாக உள்ளார்,

 மெர்சிடிஸ் பென்ஸ் GLA கிளாஸ் 220 டி

மெர்சிடிஸ் பென்ஸ் GLA கிளாஸ் 220 டி

இந்நிலையில் ஷாஜி தற்போது 22 வருடமாகத் தன் நிறுவனத்தில் மிகவும் விஸ்வாசமாகப் பணியாற்றியதைப் பாராட்டும் விதமாக மெர்சிடிஸ் பென்ஸ் GLA கிளாஸ் 220 டி காரை பரிசாக அளித்துள்ளார். இந்தக் காரின் விலை சென்னையில் 51.55 லட்சம் ரூபாயாகும்.

 ஷாஜி
 

ஷாஜி

இதுக்குறித்து MyG நிறுவனத்தின் உரிமையாளரான ஷாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்புள்ள அனிஷ், கடந்த 22 வருடமாக என்னுடன் உறுதுணையாக இருக்கிறாய், இந்தப் புதிய வாகனம் உனக்குப் பிடிக்கும் என நம்புகிறேன் எனப் பதிவிட்டு புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.

இன்ஸ்டாகிராம்

இந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் GLA கிளாஸ் 220 டி கார் உடன் அனிஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஷாஜியும் உள்ளனர். மேலும் ஷாஜி, அனிஷ் வெறும் ஊழியர் அல்ல பார்ட்னர், இந்தக் காரை பரிசாக அளிப்பதில் மகிழ்ச்சி மட்டுமல்ல பெருமையாகவும் உள்ளது.

6 கார் பரிசு

MyG நிறுவனத்தின் உரிமையாளரான ஷாஜி தனது ஊழியர்களுக்குக் காரை பரிசாக அளிப்பது இது முதல் முறை அல்ல, இரண்டு வருடத்திற்கு முன்பு 6 ஊழியர்களுக்குக் காரை பரிசாக அளித்துள்ளார். சரி சந்தோஷமாக இருக்கட்டும், கடைசியாக உங்கள் நிறுவனத்திடம் அல்லது முதலாளியிடம் இருந்து பெற்ற கிப்ட் என்ன என்பதைக் கமெண்ட் பண்ணுங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kerala businessman shaji gifts Mercedes-Benz SUV to employee for 22 years of loyality

Kerala businessman shaji gifts Mercedes-Benz SUV to employee for 22 years of loyality பென்ஸ் காரை கிப்ட் கேரள முதலாளி, இன்ப அதிர்ச்சியில் ஊழியர்.. கார் விலை என்ன தெரியுமா..?!

Story first published: Thursday, February 10, 2022, 21:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.