மணிப்பூர் தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி:
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.
60 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூர் சட்டசபை பதவிக்காலம் அடுத்த இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து, அங்கு பிப்ரவரி 27 முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மணிப்பூரில் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருந்த முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ம் தேதிக்கு பதில் மார்ச் 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.