ரேஞ்சருக்காக உருவாகும் கிராபிக்ஸ் புலி

பர்மா, ராஜா ரங்குஸ்கி, ஜாக்சன் துரை படங்களுக்கு பிறகு தரணிதரன் இயக்கும் படம் ரேன்ஞ்சர். சிபிராஜ், ரம்யா நம்பீசன், காளி வெங்கட், மதுஷாலினி நடிக்கிறார்கள். அரோல் குரோலி இசை அமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த படத்தில் காட்டிலாகா அதிகாரியாக நடித்திருக்கிறார் சிபிராஜ் . புலிவேட்டையை கதை களமாக கொண்ட படம். தற்போது கிராபிக்சில் புலியை உருவாக்கி அதை படத்தின் காட்சிகளோடு இணைக்கும் பணி நடந்து வருகிறது.

படத்தில் புலி ஒரு கேரக்டராகவே வருகிறது. ஹாலிவுட் தரத்தில் புலி கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும், பார்வையாளர்களுக்கு நிஜபுலி, கிராபிக்ஸ் புலியை இனம் பிரித்து காண முடியாத அளவிற்கு அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். திறமையான கிராபிக்ஸ் நிபுணர்கள் இந்த பணியை செய்து வருகிறார்கள்.

குறைந்த செலவிலேயே இந்த பணி நடக்கிறது. படத்தின் புலி கிராபிக்ஸ் இந்திய அளவில் பேசப்படுவதாக இருக்கும். மேற்கண்ட தகவல்கள் படத்தின் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.