விவசாய கடன்கள் தள்ளுபடி கொரோனாவில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம்: உபி.யில் காங். வாக்குறுதி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சட்டீஸ்கரை போன்று விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்,’ என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இன்று தொடங்கி 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு முடித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. லக்னோவில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ‘உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறேன். தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் பரிந்துரைகளும் இடம் பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தை நாங்கள் எவ்வாறு மேம்படுத்துவோம் என்பதை இந்த தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டு உள்ளோம்,’’ என்றார். காங்கிரசின் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் வருமாறு:* சட்டீஸ்கர் மாநிலத்தில் செய்யப்பட்டது போலவே, உபி.யிலும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.* கோதுமைக்கு ரூ.2,500, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக முறையே ரூ.2,500 வழங்கப்படும்.* தெருக்களில் சுற்றி திரியும் கால்நடைகளால் பயிர் சேதம் ஏறபடும் விவசாயிகளுக்கு ரூ.3,000 வழங்கப்படும். * மாட்டு சாணம் கிலோ ரூ.2க்கு வாங்கப்படும். * கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.* கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம் தரப்படும்.* அரசில் காலியாக உள்ள 12 லட்சம் பணியிடங்கள் உட்பட 20 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். * எஸ்.சி, எஸ்சி மாணவர்களுக்கு எல்கேஜி முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். * பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக வழக்குகள் திரும்ப  பெறப்படும்.* பாஜ. தேர்தல் அறிக்கை காப்பி… பேஸ்ட்உபி.யில் பாஜ நேற்று முன்தினம் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாஜ தனது ‘பொதுநலன் வாக்குறுதி’க்கு ‘வெற்று வாக்குறுதி’ என பெயரிட்டு இருக்க வேண்டும். 70 ஆண்டுகளை பற்றி பேசும் பாஜ, கடந்த 5 ஆண்டுகளில்தான் அளித்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை. பாஜ.வின் தேர்தல் அறிக்கையில் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் தொலைநோக்கு பார்வை இல்லை. அது, காங்கிரஸ் உறுதி மொழிகளை ‘காப்பி – பேஸ்ட்’  செய்துள்ளது,’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.