வேட்பாளர் தற்கொலை: காஞ்சிபுரம் 36 வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு…

காஞ்சிபுரம் : வேட்பாளர் தற்கொலை காரணமாக காஞ்சிபுரம் 36 வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த12,838 வார்டுகளுக்கு நடைபெற உள்ளது. இதில் சில வார்டு தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் ஒரு வார்டுக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்  ஜானகிராமன் இன்று திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில்,  காஞ்சிபுரம் 36 வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் சோகம்: வார்டு பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.