வேற லெவல் ‘மனிதர்’ சிவா… பாட்டு எழுத கிடைக்கும் ஊதியத்தை என்ன செய்கிறார் தெரியுமா?

Actor Sivakarthikeyan helps Na Muthukumar family: பாடல் எழுதி சம்பாதிக்கும் பணத்தினை நடிகர் சிவகார்த்திகேயன், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் குடும்பத்திற்கு வழங்கி வருதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நா,முத்துக்குமார். இவரின் பாடல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமை பெற்றவர் நா.முத்துக்குமார். மேலும் இரு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர பாடாலாசிரியராக இருந்து வந்த நா.முத்துகுமார், உடல் நலக்குறைவு காரணமாக 2016-ல் மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இன்று வரை அவரது வரிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தான் எழுதும் பாடல்களுக்கு பெறும் சம்பளத்தை நா.முத்துகுமாரின் குடும்பத்தினருக்கு வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நா.முத்துகுமார், சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் என்ற தந்தை செண்டிமெண்ட் பாடலை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் முதன்முதலாக, கோலமாவு கோகிலா திரைப்படத்தில் கல்யாண வயசு பாடலை எழுதியதன் மூலம் பாடலாசிரியரானார். பின்னர் கூர்க்கா, நம்ம வீட்டு பிள்ளை, ஆதித்யா வர்மா, நாய் சேகர் உள்ளிட்ட படங்களில் தலா ஒரு பாடல்களை எழுதியுள்ளார். அவரது நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருந்தார். தற்போது பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களிலும் பாடல்களை எழுதியுள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.